/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/10_170.jpg)
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமிக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டு வந்துள்ளது. இதையடுத்து அவரது தாயார் சிறுமியை திருப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்குச் சிறுமிக்கு மேற்கொண்ட மருத்துவ சோதனையில் அவர் 6 மாதம் கர்ப்பமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தாய், மகளிடம் விவரத்தை கேட்டார். அப்போது அந்த சிறுமி, உறவுக்காரரின் மகனான 17 வயது சிறுவனுடன் பழக்கம் ஏற்பட்டு அதன் மூலம் நெருங்கிப் பழகியதால் கர்ப்பமானதாகத் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, சிறுமியின் தாய் நடந்த சம்பவம் குறித்து கோபிசெட்டிபாளையம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் 17 வயது சிறுவன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)