Skip to main content

ஊராட்சி மன்றத் தலைவரின் கணவர் பதுக்கிய மது பாட்டில்கள்! 

Published on 22/09/2021 | Edited on 22/09/2021

 

Bottles of wine stored by the husband of the Panchayat President!

 

திண்டுக்கல் அருகே ஊராட்சி மன்ற முன்னாள் தலைவரின் தோட்டத்து வீட்டிலிருந்து பல லட்சம் மதிப்பலான மது பாட்டில்கள் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும், இது தொடர்பாக ஐந்து பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 

 

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் தாலுகாவில் இருக்கும் அனுமந்தரான் கோட்டை ஊராட்சி மன்றத் தலைவராக இருப்பவர் நிர்மலா. இவரது கணவர் இன்பராஜ், அனுமந்தரான் கோட்டை ஊராட்சி மன்ற முன்னாள் தலைவராக இருந்தவர். தர்மத்துப்பட்டி செல்லும் சாலையில் பிரதமர் மேடு என்ற இடத்தில் உள்ள இவரது தோட்டத்து வீட்டில் மதுபானங்களைப் பதுக்கிவைத்து விற்பனை செய்வதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. 

 

Bottles of wine stored by the husband of the Panchayat President!

 

அதன்பேரில் ஏ.டி.எஸ்.பி., எஸ்.பி., தனிப்பிரிவு போலீசார் மற்றும் திண்டுக்கல் தாலுகா போலீசார் ஆகியோர் இன்பராஜின் தோட்டத்து வீட்டில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அந்தச் சோதனையில், இன்பராஜ் தோட்டத்து வீட்டில் பாண்டிச்சேரியிலிருந்து கடத்திக் கொண்டுவரப்பட்ட மதுபானங்கள் மற்றும் டாஸ்மாக் கடையிலிருந்து வாங்கப்பட்ட மதுபானங்கள் என மொத்தம் 11,500 பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதன் மதிப்பு பல லட்சம் இருக்கும் என்று போலீசார் தெரிவித்தனர். சில்லறையில் மதுபானங்கள் விற்பனை செய்வதற்காக அதனை அவர் வாங்கி வைத்திருப்பார் என்று தெரியவந்துள்ளது. இது தொடர்பாக 5 பேரை கைது செய்த போலீசார், அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்திவருகின்றனர். முதல்முறையாக இவ்வளவு மது பாட்டில்களைப் பறிமுதல் செய்துள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'எல்லாருமே திருடங்கதான்... சொல்லப் போனா...' - பாடலுக்கு நடனமாடியபடி வந்த சுயேச்சை வேட்பாளர்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Independent candidate danced to the song 'ellarume Thirudangathan... sollpona...'

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

நேற்று வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையில் இன்று மனுக்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட இருக்கிறது. நேற்று முக்கிய கட்சிகளின் பிரமுகர்கள் முதல் சுயேச்சை வேட்பாளர்கள் எனப் பலர் இறுதி நாள் என்பதால் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்தனர். வேட்புமனு தாக்கல் செய்ய வரும் சுயேச்சை வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சியைச் சேர்ந்த வேட்பாளர்கள் சிலர் நூதன முறைகளில் வந்து வேட்புமனு தாக்கல் செய்வது முன்னரே பல தேர்தல்களில் நடந்துள்ளது.

தேர்தல் நேரங்களில் இதுபோன்ற நூதன சம்பவங்கள் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் திண்டுக்கல்லில் வேட்புமனு தாக்கல் செய்ய வந்த சுயேச்சை வேட்பாளர் ஒருவர் 'எல்லாருமே திருடங்கதான் சொல்லப்போனால் குருடங்கதான்' என்ற பாடலை ஒலிக்கவிட்டபடி சாலையில் நடனமாடிக்கொண்டே வேட்புமனு தாக்கல் செய்ய வந்தார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Next Story

ஒயின் ஷாப்புகளில் அதிகவிலை! ஆத்திரத்தில் பெட்டி பெட்டியாக அள்ளிச்சென்ற பொதுமக்கள்!

Published on 22/03/2024 | Edited on 22/03/2024
liquor shops are selling liquor bottles at high prices, causing public dissatisfaction in Telangana

தெலங்கானாவில் அதிக விலைக்கு மதுபானம் விற்பனை செய்ததாகக் கூறி, நான்கு ஒயின் ஷாப்புகளை முற்றுகையிட்ட பொதுமக்கள், கடைகளில் இருந்த ரூ.22 லட்சம் மதிப்புள்ள மது பாட்டில்களை அள்ளிச்சென்றனர். தெலங்கானா, பத்ராத்ரி கொத்தகுடேம் மாவட்டம், தெகுலப்பள்ளியில் MRP விலையைவிட ரூ.20 முதல் ரூ.30 வரை அதிக விலைக்கு, மது விற்பனையாளர்கள் சிண்டிகேட் அமைத்து மது விற்பதாக  மதுப்பிரியர்கள் குற்றம்சாட்டி வந்தனர்.

இந்நிலையில், ஆத்திரமடைந்த கிராம மக்கள் மதுக்கடைகள் முன்பு திரண்டு, நான்கு ஒயின்ஷாப்புகளில்  இருந்த  மதுபானங்களை அள்ளிச் சென்றனர். பொது மக்கள் பலரும் மது பாட்டில்களை அள்ளிச்சென்ற நிலையில், அவ்வழியாகச் சென்ற வாகன ஓட்டிகளும் மதுபாட்டில்களை எடுத்துச்சென்றனர். இதனை ஊழியர்கள் தடுக்க முயன்றும் முடியாததால், காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

liquor shops are selling liquor bottles at high prices, causing public dissatisfaction in Telangana

இச்சம்பவத்தின்போது, பெரும்பாலும் பெண்களே மதுபாட்டில்களை எடுத்துச் சென்றனர். இதனையடுத்து, டிஎஸ்பி சந்திரபானு தலைமையில் அங்கு வந்த காவல்துறையினர், கடை உரிமையாளர்களின் புகாரின் அடிப்படையில் விசாரித்து வருகின்றனர்.  மொத்தத்தில் சுமார் ரூ.22 லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்களை பொது மக்கள் அள்ளிச் சென்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.