ஈரோட்டில் பால் பண்ணை கொதிகலன் வெடித்து ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு அடுத்த சோலாறில் இயங்கி வந்த ஒரு தனியார் பால் பண்ணையில் பால் குளிரூட்டும் பணிகள் நடைபெற்று வருவதோடு பால்கோவா உள்ளிட்ட பால் பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வந்தது.
இந்த நிறுவனத்தில் மொத்தம் நான்கு பேர் பணியாற்றி வருகின்ற நிலையில், இன்று காலை வழக்கம்போல் இரண்டு தொழிலாளர்கள் பால் பண்ணைக்கு வந்து பாய்லரை இயக்கி அன்றாட பணிகளைத் துவங்கியுள்ளனர். அப்பொழுது திடீரென பாய்லர் வெடித்துச் சிதறியதில் தொழிலாளர் ஒருவர் உயிரிழந்தார். மற்றொரு தொழிலாளர் பாய்லருக்கு சற்று தொலைவில் பணிசெய்து கொண்டிருந்ததால் தப்பித்துக் கொண்டதாகக் கூறப்படுகிறது. விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மொடக்குறிச்சி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.