
காதல் கணவனால் மனைவி கொடூரமாகக் கொலை செய்யப்பட்டு வீசப்பட்ட சம்பவம் சென்னை அருகே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
செங்குன்றம் பகுதியைச் சேர்ந்த தமிழ்செல்வி என்பர் மதன் என்ற நபரை காதலித்து திருமணம் செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த ஜூன் 23ஆம் தேதி தனது மகளைக் காணவில்லை என தமிழ்ச்செல்வியின் தந்தை போலீசில் புகாரளித்தார். இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் காதல் கணவன் மதனே கொலை செய்தது தெரியவந்தது. சென்னையிலிருந்து திருப்பதி செல்லக்கூடிய பகுதியில் இருக்கக்கூடிய கைலாச கோனா அருவியில் குளிக்க அழைத்துச் சென்றபோது கத்தியால் தமிழ்ச்செல்வியை குத்தி கொலை செய்ததாக மதன்குமார் தெரிவித்துள்ளார். அதன் பிறகு மதனை கைலாச கோனா அருவிக்கு பகுதிக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி கொலை செய்யப்பட்ட தமிழ்ச்செல்வியின் உடலை போலீசார் கைப்பற்றினர்.