Skip to main content

6 துண்டுகளாக வெட்டப்பட்ட உடல்... அடையாற்றில் வீசப்பட்ட தலை... அதிரவைக்கும் திமுக நிர்வாகியின் கொலை!

Published on 14/05/2022 | Edited on 14/05/2022

 

 Body cut into 6 pieces ... Head thrown at Adyar ...  DMK executive incident

 

காணாமல் போன திமுக நிர்வாகி கொலை செய்யப்பட்டு 6 துண்டுகளாக வெட்டப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், இந்த கொலை தொடர்பாக பெண் உட்பட இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

திருவொற்றியூர் 7 வார்டு திமுக பிரதிநிதியான சக்கரபாணி காணாமல் போனதாக மணலி காவல் நிலையத்தில் அவரது குடும்பத்தினர் புகார் கொடுத்திருந்தனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்ட நிலையில் சக்கரபாணியின் மொபைல் எண்ணை கொண்டு விசாரணை செய்ததன் அடிப்படையில் ராயபுரம் கிரேஸ் கார்டன் பகுதியில் உள்ள வீட்டில் சோதனையில் போலீசார் ஈடுபட்டபொழுது கழிவறையில் தலையில்லாத உடல் கண்டெடுக்கப்பட்டது. மேலும் உடல் பகுதி 6 துண்டுகளாக வெட்டப்பட்டு சாக்குப்பையில் மூட்டை கட்டப்பட்டு கிடந்தது.

 

 Body cut into 6 pieces ... Head thrown at Adyar ...  DMK executive incident

 

இதுதொடர்பாக அந்த வீட்டில் இருந்த தமின்மானு என்ற பெண்ணை போலீசார் பிடித்து விசாரித்ததில் அந்த பெண்ணிற்கும் சக்கரபாணிக்கும் முறையற்ற உறவு இருந்ததும், இதனை பெண்ணின் கணவரின் தம்பி வசீம் பாஷா கண்டித்ததும் இதனால் சக்கரபாணிக்கும் வசீம் பாஷாவுக்கும் மோதல் ஏற்பட்டதும் தெரியவந்தது. மோதலில் சக்கரபாணியை கொலை செய்து உடலை 6 துண்டுகளாக வெட்டி தலையை அடையாறு திருவிக பாலத்தில் இருந்து ஆற்றில் தூக்கி எறிந்ததும் விசாரணையில் தெரியவந்தது.

 

 Body cut into 6 pieces ... Head thrown at Adyar ...  DMK executive incident

 

6 துண்டுகளாக வெட்டப்பட்ட உடலையும் அதேபோல் ஆற்றில் வீச வைத்திருந்த நிலையில், கொலையாளிகள் போலீசார் வசம் சிக்கியுள்ளனர். இந்த சம்பவத்தில் சக்கரபாணியுடன் முறையற்ற தொடர்பில் இருந்த தமின்மானு, வசீம் பாஷா ஆகிய இருவரையும் கைது செய்துள்ள போலீசார் டில்லி பாபு என்ற ஆட்டோ ஓட்டுநரை தேடி வருகின்றனர்.

 

 Body cut into 6 pieces ... Head thrown at Adyar ...  DMK executive incident

 

காணாமல் போன திமுக நிர்வாகி 6 துண்டுகளாக வெட்டப்பட்டு தலை ஆற்றில் வீசப்பட்ட சம்பவம் ராயபுரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்