Skip to main content

கருப்பு கொடிக்கு அனுமதி வேண்டும் - திமுக : கைது செய்வோம் - போலீஸ்

Published on 17/07/2018 | Edited on 17/07/2018


 

    தமிழகத்தின் தூய்மையான நகராட்சிகளில் முதன்மையான நகராட்சியான புதுக்கோட்டைக்கு 20ந் தேதி காலை ஆளுநர் பன்வாரிலால் புரோகித் வருகை தந்து தூய்மை இந்தியா திட்டத்தை பார்க்கிறார். அடுத்து சித்தன்னவாசல் சென்று பிறகு மதியம் பொதுமக்களிடம் மனு வாங்குகிறார். இப்படி ஒரு அறிவிப்பு வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் ஆளுநர் வந்தால் கருப்புக் கொடி காட்டுவோம் என்று தி.மு.க. திங்கள்கிழமையே மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் கூட்டத்தை கூட்டி தீர்மானம் போட்டுவிட்டனர்.
 

 

 

    இந்த நிலையில் இன்று செவ்வாய்கிழமை காலை தி.மு.க மாவட்ட பொருப்பாளர்கள் ரகுபதி எம்.எல்.ஏ, செல்லப்பாண்டியன் ஆகியோர் ஆளுநர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு கொடி காட்ட அனுமதி வேண்டும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். ஆனால் அப்போதே அனுமதி கிடைக்காது என்று போலிசார் கூறிவிட்டனர். அதன் பிறகு ஆளுநர் வருகையையொட்டி பாதுகாப்பு எற்பாடுகளை கவணிக்க புதுக்கோட்டை வந்த திருச்சி டி.ஐ.ஜி.லலிதா லெட்சுமி ஆய்வுக்கு பிறகு எஸ்.பி. அவுலகத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை செய்து கொண்டிருந்த போது காலையில் மனு கொடுத்த தி.மு.க பிரமுகர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டு அழைக்கப்பட்டனர்.
 

    தி.மு.க மாவட்ட பொருப்பாளர்கள் எஸ்.ரகுபதி எம்.எல்.ஏ, கே.கே.செல்லப்பாண்டியன், நெசவாளர் அணி மாவட்ட அமைப்பாளர் எம்.எம்.பாலு. மற்றும் உ்.பி.க்கள் எஸ்.பி அலுவலகத்தில் டி.ஐ.ஜி யை சந்தித்து கருப்பு கொடி காட்ட அனுமதி கேட்டனர். கருப்புக் கொடி காட்ட அனுமதி இல்லை. மேலும் அப்படி முயன்றால் கைது, சிறை, பிணை கிடைக்காத பிரிவுகளில் வழக்கு பதிவு இருக்கும் என்று கூறிவிட்டார். அதனால் போராட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட இடங்களில் போராட்டம் நடத்தலாம் என்று சொல்ல மாவட்ட நிர்வாகத்தால் ஒதுக்கப்பட்டு்ள்ள இடங்களின் வழியாக ஆளநர் வரவில்லை அதனால் அவர் செல்லும் வழியில் ஒரு இடத்தை ஒதுக்கித் தர வேண்டும் என்றனர். அப்படி ஒதுக்க முடியாது. நாமக்கல் பிரச்சணைக்கு பிறகு அரசாரண கடுமையாக உள்ளது. அதன்படி முன்னதாக வும் கைது செய்ய வாய்ப்புகள் உள்ளது என்ற டி.ஐ.ஜி கூறிவிட்டார். ஆனால் கைது, சிறை எதுவானாலும் சரி மாநில சுயாட்சிக்கு எதிராக ஆயுவு செய்ய வரும் ஆளுநருக்கு தி.மு.க கருப்பு கொடி காட்டுவது உறுதி சுமார் 5 ஆயிரம் பேர் கலந்து கொள்வார்கள் என்று கூறிவிட்டு வெளியே சென்றனர்.
 

 

 

    அதன் பிறகு தி.மு.க கருப்பு கொடி காட்டுவதை தடுக்க என்ன நடவடிக்கை எடுப்பது என்பது பற்றிய ஆலோசனை காவல் துறையினர் மத்தியில் நடந்துள்ளது. 
 

    வெளியே வந்த தி.மு.க வினர்.. கருப்பு கொடி காட்ட முறையாக அனுமதி கேட்டுள்ளோம். அனுமதி இல்லை என்று வாய்மொழியாக சொன்னார்கள். எங்கள் மனுவுக்கு எழுத்துபூர்வமாக பதில் கொடுத்தால் நீதிமன்றத்தில் கூட அனுமதி வாங்க முடிவு செய்துள்ளோம். ஆனால் நாமக்கல் பிரச்சணைக்கு பிறகு சட்டம் கடுமையாக்கப்பட்டுள்ளதாக போலிசார் கூறுகிறார்கள். எப்படியானாலும் தி.மு.க கருப்பு கொடி காட்டுவது உறுதி. எத்தனை பேரை கைது செய்தாலும் செய்யட்டும் சிறைக்கு செல்லவும் தயாராக இருக்கிறோம். மேலும்.. லண்டனில் இருந்து செயல் தலைவர் வந்த பிறகு எப்படி செயல்பட வேண்டும் என்று சொல்கிறாரோ அதுபடி புதுக்கோட்டை மாவட்ட தி.மு.க செயல்படும் என்றனர்.

 
ஆளுநர் வருகைக்கு முன்பே தி.மு.க வின் முக்கிய பிரமுகர்கள் கைது செய்யப்பட வாய்ப்புகள் இருக்கலாம்.
 

 


            
 

சார்ந்த செய்திகள்