அரியலூர் பொன்பரப்பியில் இரு தரப்பு மோதல்கள் வருத்தமளிக்கின்றது என்று பாரதிய ஜனதா கட்சி மாநில பிரச்சார அணி செயலர் வே .ராஜரத்தினம் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Advertisment

ponparappi

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="7632822833"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

நாடாளுமன்ற தேர்தலின்போது வாக்களிப்பதில் அரியலூர் மாவட்டம் பொன்பரப்பியில் இரு குழுவினருக்கு இடையே ஏற்பட்ட வன்முறை மோதல் கண்டனத்திற்கு உரியது. சமுதாய ஒடுக்கப்பட்ட மக்கள் வன்முறைக்கு இரையாகி உள்ளனர். மனித நாகரீக வளர்ச்சி என்பது அனைத்து துறைக்கும் பொதுவானது. இந்தியா வல்லரசு ஆகிவிட்டது, ஆனால் சாதியம் ஒழியவில்லை என்பதால் என்ன பயன் விளைய போகிறது. இந்து மதத்தில் சாதியம் புற்று நோயாக மாறுமுன் அனைத்து கட்சி தலைவர்களும் ஒன்றுபட்டு சமுதாய பிரிவினையயை ஒழிக்க வேண்டும். தமிழக காவல்துறை பொன்பரப்பி வன்முறையில் ஈடுபட்டவர்களை எவ்வித பாரபட்சமின்றி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சி சார்பாக கேட்டு கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.