வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதையடுத்து, தமிழ்நாட்டில் பெரும்பாலான மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டது. இந்த நிலையில், சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தபடி காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று (19/11/2021) காலை சென்னைக்கு அருகே கரையைக் கடந்தது.

Advertisment

இதனால் வட தமிழ்நாடு, தெற்கு ஆந்திரா பகுதிகளில் கடல் சீற்றம் அதிகமாக காணப்பட்டது. அதேபோல், சென்னை, திருவள்ளூர், கடலூர், வேலூர், நாகை, காஞ்சிபுரம், நாமக்கல், ராணிப்பேட்டை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் கனமழை பெய்தது.இந்த நிலையில், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து குடும்பங்களுக்கும் வெள்ள நிவாரண நிதியாக ரூபாய் 5 ஆயிரம் வழங்கக் கோரி தமிழ்நாடு பாஜக சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே ஆர்ப்பாட்டம் நடத்தினர்.