bjp incident in mayiladuthurai

Advertisment

மயிலாடுதுறையில் பாஜக பிரமுகர் மீது பாலியல் புகார் அளித்ததற்காக சிறுமிகளின் தந்தை மற்றும் உறவினர்கள் மீது கத்திக்குத்து நடந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குத்தாலம் அருகே கோழிகுத்தி என்ற கிராமத்தில் கத்தியால் குத்தப்பட்டுகாயமடைந்த 2 பேரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். முன்னதாக சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை தந்ததாக பாஜக பிரமுகர் மகாலிங்கம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். மகாலிங்கத்தின் மகன் ஜவகர், சுதாகர் ஆகிய இருவர் உட்பட 12 பேர் ஒன்றுசேர்ந்து பாலியல் புகார் தந்ததற்காக அந்தச் சிறுமிகளின் தந்தை மற்றும் உறவினர்கள் மீது தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். இந்தச் சம்பவத்தில் பாஜக பிரமுகரின் மகன்கள் உட்பட 12 பேர் மீதான புகாரை குத்தாலம் போலீசார் தற்போது விசாரித்துவருகின்றனர். பாலியல் புகார் கொடுத்ததற்காக பாஜக பிரமுகர் தரப்பு,பாதிக்கப்பட்டவர்களைக் கத்தியால் குத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.