/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/a964.jpg)
பாஜக கொடி கட்டிய காரில் சென்ற பெண்ணை வழிமறித்த கும்பல் ஒன்று கடத்திச் சென்ற சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி இருந்தது.
இந்த சம்பவத்தின் பின்னணியில் சென்னைசித்தாலப்பாக்கம்ஜெயா நகரைச் சேர்ந்தவர் லட்சுமிபிரியா. இவர் கணவரை பிரிந்து வாழ்ந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இவருக்கு 19 வயதில் மகனும் உள்ளார். கடந்த 2009 ஆம் ஆண்டு சிவகுமார் என்பவரோடு நட்பு ஏற்பட்டு இருவரும் 2010 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. ரியல் எஸ்டேட் செய்து வரும் சிவகுமார் பாஜக சென்னை கிழக்கு மாவட்ட வர்த்தக அணி தலைவராகவும் இருந்துள்ளார்.
லட்சுமி பிரியாவை இரண்டாவது திருமணம் செய்து கொண்ட அவர் சிவகுமாரின் முறையற்ற தொடர்பு குறித்து தெரிந்து அதைப்பற்றி சிவகுமாரிடம் லட்சுமிப்ரியா கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இந்நிலையில் ஆத்திரமடைந்த சிவகுமார் மனைவியை கடத்த திட்டமிட்டு அவருடைய நண்பர்களுக்கு கட்டளையிட்டுள்ளார். திருநீர்மலை கோவிலுக்கு சென்று விட்டு இளைய மகனுடன் காரில் லட்சுமி பிரியா வீடு திருப்பிக் கொண்டிருந்தார். அப்போது அவரை வழிமறித்த கும்பல் ஒன்று அவரை வலுக்கட்டாயமாக காரிலிருந்து இறக்கி கடத்திச் சென்றது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/a965.jpg)
பெண் கடத்தப்படுவதை அறிந்த அக்கம்பக்கத்தினர் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். அதனடிப்படையில் பள்ளிக்கரணை போலீசார் அந்த கும்பலை கைது செய்தனர். போலீஸ் விசாரணையில் அவரை கடத்தியது இரண்டாவது கணவர் சிவகுமார் என்பது தெரிய வந்த நிலையில் நடவடிக்கை எடுக்க வேண்டாம் என எழுதிக் கொடுத்துவிட்டு சென்றுவிட்டார். பின்னர் அடுத்தநாள்தாம்பரம் காவல் ஆணையரகத்தில் சிவகுமார் தன்னை ஏமாற்றி இரண்டாவது திருமணம் செய்து கொண்டதாகவும், தன்னிடம் உள்ள சொத்துக்களை எழுதி வாங்க கடத்தியதாகவும் லட்சுமிபிரியா புகார் அளித்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)