Published on 02/03/2021 | Edited on 02/03/2021

தமிழக தேர்தல் களம் தற்போது சூடுபிடித்துள்ளது. பிரதான கட்சிகளான அதிமுக மற்றும் திமுக இரண்டும், தங்களுடைய கூட்டணி கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தையைத் தொடங்கியுள்ளன. அதன்படி, அதிமுக தரப்பு பாமகவுக்கு 23 தொகுதிகளை ஒதுக்கியுள்ளது. திமுக, ஐயூஎம்எல் கட்சிக்கு 3 தொகுதிகளையும், மமகவுக்கு 2 தொகுதிகளையும் ஒதுக்கியுள்ளது. இந்நிலையில் அதிமுக கூட்டணியில், தேமுதிக என்ன முடிவெடுக்கும் என்று தெரியாமல் உள்ளது.
அதே நேரத்தில் பாஜகவுடன் ஏற்கனவே கூட்டணி பேச்சுவார்த்தை தொடங்கப்பட்ட நிலையில், தற்போது இன்றும் (02.03.2021) பேச்சுவார்த்தை தொடரும் என்று அதிமுக தரப்பு அறிவித்துள்ளது. 20க்கும் அதிகமான தொகுதிகளை பாஜக எதிர்பார்ப்பதாகவும், கூடுதலாக குமரி நாடாளுமன்ற தொகுதியையும் கேட்பதாக தகவல் வெளியாகியுள்ளது.