Skip to main content

பாஜக அலுவலகத்தில் நடிகை கவுதமி!

Published on 16/11/2019 | Edited on 16/11/2019
g

 

நடிகை கவுதமி இன்று தமிழக பாஜக அலுவலகம் வந்தார்.  இதையடுத்து அங்கே  செய்தியாளர்கள் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.   அப்போது செய்தியாளர்களிடம் பேசிய கவுதமி, ‘’உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விருப்பமனு கொடுத்துவரும் பாஜகவினருக்கு வாழ்த்து தெரிவிக்க வந்தேன்’’என்றார்.

 

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், தான் பாஜகவில் அடிப்படை உறுப்பினராக இருப்பதாகவும், மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயிடம் உறுப்பினர் அட்டை பெற்று  பாஜகவில் அரசியல் வாழ்க்கையை தொடங்கினேன்.  எந்தப்பதவியும் இல்லாமல் பாஜகவில் அரசியல் பயணம் தொடரும்’’என்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

கௌதமியின் புகார் - 6 பேர் அதிரடி கைது!

Published on 21/12/2023 | Edited on 21/12/2023
gautami bjp azagappan case update

நடிகை கௌதமி பாஜகவில் இணைந்து பல்வேறு பொறுப்புகளை வகித்து வந்த நிலையில், கடந்த செப்டம்பர் மாதம் தனது ரூ. 25 கோடி மதிப்பிலான சொத்துகளை பாஜகவைச் சேர்ந்த அழகப்பன் மற்றும் அவரது குடும்பத்தினர் சேர்ந்து அபகரித்துவிட்டதாக மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார்.

அந்த புகாரில், “நான் திரைத்துறையில் சம்பாதித்த பணத்தின் மூலம் சில இடங்களில் நிலம் வாங்கினேன். கடந்த 2004 ஆம் ஆண்டு நான் புற்றுநோயால் பாதிக்கப்பட்டபோது, எனது மகளின் பராமரிப்பு செலவுக்காகவும், எனது மருத்துவச் செலவுக்காகவும் அந்த இடங்களை விற்க முடிவு செய்தேன். அதற்கு பாஜகவைச் சேர்ந்த கட்டுமான நிறுவனம் நடத்தி வரும் அழகப்பன் என்பவர் உதவி செய்வதாக கூறினார். அதனால் எனது சொத்துக்களை விற்கும் உரிமையை அவருக்கு கொடுத்தேன். அதற்காக என்னிடம் பல பத்திரங்களில் கையெழுத்து வாங்கினார். ஆனால் அதன் மூலம் போலி பத்திரங்களைத் தயார் செய்து, அழகப்பன் மற்றும் அவரது குடும்பத்தினர் எனது சொத்துக்களை அபகரித்துவிட்டனர். இது குறித்துக் கேட்டபோது எனக்கு கொலை மிரட்டல் விடுக்கிறார்” என்று குற்றம்சாட்டியிருந்தார்.  

இதனைத் தொடர்ந்து “25 ஆண்டுகாலமாக கட்சியில் இருந்து வருகிறேன். ஆனால் எனக்கு கட்சி துணை நிற்கவில்லை. ஆனால் அழகப்பனுக்கு பாஜகவில் இருக்கும் மூத்த நிர்வாகிகள் உதவி செய்கின்றனர்” என்று குற்றம்சாட்டிய கௌதமி, பாஜகவிலிருந்து விலகுவதாகத் தெரிவித்திருந்தார். இதையடுத்து கௌதமி கொடுத்த புகாரின் அடிப்படையில் பாஜக பிரமுகர் அழகப்பன், அவரது மனைவி நாச்சல் அழகப்பன், மகன் சிவா, மருமகள் ஆர்த்தி, பாஸ்கர், சதீஷ்குமார் ஆகிய 6 பேர் மீது 5 பிரிவுகளின் கீழ் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குற்றம்சாட்டப்பட்டவர்கள் பல நாட்கள் தலைமறைவாக இருந்து வந்ததால், மூன்றுக்கும் மேற்பட்ட தனிப்படை அமைத்து போலீஸார் தேடி வந்தனர். மேலும் அவர்களின் இடங்களிலும் போலீஸார் சோதனை நடத்தி பல்வேறு ஆவணங்கள் மற்றும் பணத்தை மீட்டனர். பின்பு லுக்கவுட் நோட்டீஸும் வழங்கப்பட்டது. 

அதன் பிறகு குற்றம்சாட்டப்பட்டவர்கள் முன் ஜாமீன் கோரிய நிலையில் அது தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த நிலையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு தனிப்படை போலீஸார், கேரளா திருச்சூருக்கு சென்று 6 பேரை கைது செய்துள்ளனர். அவர்களை சென்னைக்கு அழைத்து வரும் நடவடிக்கைகளை போலீஸார் மேற்கொண்டு வருகின்றனர். நாளை எழும்பூர் நீதிமன்றத்தில் அவர்களை ஆஜர்படுத்தவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

Next Story

“கௌதமியின் விலகல் மிகவும் வருத்தமளிக்கிறது” - வானதி ஸ்ரீனிவாசன்

Published on 23/10/2023 | Edited on 23/10/2023

 

Vanathi Srinivasan said that Gautami  resignation from BJP is also sad

 

பிரபல நடிகை கௌதமி சென்னை கமிஷ்னர் அலுவலகத்தில், கடந்த மாதம் தனது ரூ. 25 கோடி மதிப்பிலான சொத்துகளை பாஜகவைச் சேர்ந்த அழகப்பன் மற்றும் அவரது குடும்பத்தினர் சேர்ந்து அபகரித்துவிட்டதாகப் புகார் அளித்திருந்தார். இந்த நிலையில் நடிகை கௌதமி, 25 ஆண்டுகளாகக் கட்சிக்காக உழைத்திருக்கிறேன்; ஆனால் கட்சி எனக்குத் துணை நிற்கவில்லை என்று கூறி பாஜகவிலிருந்து  விலகுவதாக அறிவித்தார். 

 

இந்த நிலையில் கௌதமி விலகியது வருத்தமளிப்பதாக எம்.எல்.ஏ வானதி ஸ்ரீனிவாசன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாகக் கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “கௌதமி மீது எனக்கு அதிகளவு அன்பும், மரியாதையும் இருக்கிறது. அவர் கட்சிக்காகத் தீவிரமாக உழைக்கக்கூடிய பெண்மணி. நான் மூன்று வருடத்திற்கு முன்பு கூட கௌதமியைத் தேசிய அளவில் மகளிர் அணியில் இணைந்து பணியாற்றுவதற்காக அழைப்பு விடுத்திருந்தேன்.  ஆனால் கௌதமி மாநில அளவிலே வேலை செய்து கொள்கிறேன் என்று தெரிவித்தார். அதன் பிறகு மாநில அளவில் சில நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டார்.

 

எனக்கு மாநில அளவிலான வேலைகள் இல்லதால் கௌதமியைச் சரிவரப் பார்க்கவோ, பேசவோ நேரம் இல்லாமல் இருந்தது. கடந்த மாதம் கூட கௌதமிடம் தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு பேசினேன். தான் ஒரு நடிகை என்று நினைக்காமல் கட்சியின் அடிமட்ட தொண்டராக பணியாற்றியனார். தற்போது அவரின் கடிதம் மிகுந்த மன வேதனையை ஏற்படுத்தியிருக்கிறது. கௌதமி எதிலும் சோர்ந்து போகக்கூடிய ஆளில்லை; தன்னம்பிக்கையும், தைரியமும் உள்ள பெண். 10 நாட்களுக்கு முன்பு ஒரு வழக்கு தொடர்பாக அவரது உதவியாளர் எனக்கு, கட்சியில் சிலர் கௌதமிக்கு எதிராகச் செயல்படுகிறார்கள் என்று மெஜேஜ் அனுப்பியிருந்தார். நானும் அதைப் பற்றித் தெரியவில்லை; முழுமையான தகவல் கொடுங்கள் உதவி செய்கிறேன் என்று தெரிவித்திருந்தேன். ஆனால் இன்று வெளியிட்டுள்ள அவரது அறிக்கை எனக்கு ரொம்ப கஷ்டமாக இருக்கிறது. 

 

கட்சிக்காரர்களைச் சட்டத்திற்குப் புறம்பாக யாரையும் பாதுகாக்கப் போவதில்லை. என்ன பிரச்சனை என்று முழுமையாகக் கூறியிருந்தால் அவருக்கு உதவி செய்ய வாய்ப்பாக இருந்திருக்கும். ஆனால் ஒரு மாநில அரசிடம் புகார் கொடுத்தும் இத்தனை நாளாக நடவடிக்கை எடுக்கவில்லை. திமுக அரசு பாஜகவில் இருந்ததால் கௌதமி கொடுத்த புகாரை எடுக்கவில்லை. ஆனால் இன்று கட்சியில் இருந்து விலகியவுடன் புகார் மீது நடவடிக்கை எடுத்துள்ளனர். மீண்டும் கௌதமிக்கு என்ன உதவி வேண்டுமானாலும் செய்யத் தயாராக இருக்கிறேன்” என்றார்.