Skip to main content

குழந்தைகளை ஏலத்தில் விடும் விநோத கோயில் திருவிழா! 

Published on 10/03/2022 | Edited on 10/03/2022

 

Bizarre temple festival to auction off children!

 

தமிழ்நாட்டில் பரவலாக அங்காளம்மான் கோயில்கள் உள்ளன. அதிலும், குறிப்பாக வட மாவட்டங்களில் இந்த கோயில்கள் அதிகம். இதற்கு ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் தொடங்கி கோடை காலம் முடியும் வரை திருவிழாக்கள் நடைபெறும். அதேபோல், ஒவ்வொரு கிராமத்திலும் அங்காளம்மனுக்கு வினோதமான வழிபாடுகளை செய்வார்கள். கடந்த இரண்டு ஆண்டுகளாக கரோனா பரவல் காரணமாக திருவிழாக்களுக்கு தடை செய்திருந்தது அரசு. தற்போது தடைகள் நீக்கப்பட்ட நிலையில், கிராமந்தோறும் கோயில் திருவிழாக்கள் பிரமாண்டமாக நடைபெற ஆரம்பித்துள்ளன. அதிலும் அங்காளம்மன் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. 

 

அந்தவகையில், உளுந்தூர்பேட்டை அருகே உள்ள காட்டு நிமிலி கிராமத்தில் உள்ள அங்காளம்மன் கோயிலில் திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் நேற்று மயான கொள்ளை திருவிழா நடைபெற்றது. அப்போது அலங்கரிக்கப்பட்ட சிங்க வாகனத்தில் அங்காளம்மன், ஊரிலிருந்து புறப்பட்டு ஏராளமான பக்தர்களுடன் மயானத்தை நோக்கி புறப்பட்டது. மயானம் வந்தடைந்ததும் அங்கு கொள்ளை விடும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது பலியிடப்பட்ட ஆட்டின் ரத்தம் கலந்த சோறு, சுண்டல், கொழுக்கட்டை உள்ளிட்டவை வைத்து படையல் நடத்தப்பட்டது. அந்த ரத்த சோறை சாப்பிட்டால் குழந்தை பிறக்கும் எனும் நம்பிக்கை மக்களிடத்தில் உள்ளது. அதனால், ஏராளமானோர் அந்த சோறை வாங்கி சாப்பிட்டனர். அதேபோல் இறந்து போன முன்னோர்கள் விரும்பி சாப்பிடும் உணவு வகைகள், பீடி, மது உள்ளிட்டவற்றையும் மக்கள் மயானத்தில் வைத்து வழி பட்டனர்.  

 

Bizarre temple festival to auction off children!

 

இதைத்தொடர்ந்து குழந்தை ஏலம் விடும் விநோத நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், நீண்ட காலம் குழந்தை இல்லாமல் இருப்பவர்கள் இந்த அம்மனிடம் வந்து வேண்டி பலி சோறு சாப்பிட்டு அதன் பலனாக குழந்தை பாக்கியம் கிடைத்த பெண்கள், தங்கள் குழந்தைகளை இங்கு கொண்டு வந்து மயானத்தில் பூசாரியிடம் ஒப்படைப்பார்கள். அப்போது பூசாரி அந்த குழந்தைகளை கூட்டத்தின் மத்தியில் குழந்தை உயரத் தூக்கிப் பிடித்து ஏலம் விடுவார். குழந்தை இல்லாத தம்பதிகள் அந்த குழந்தையை ஏலத்தில் எடுப்பார்கள். அதற்கு ஏலத் தொகையாக பணத்தை கொடுத்து குழந்தைகளை ஏலம் எடுப்பார்கள். அதன்பிறகு சம்பந்தப்பட்ட பெற்றோர்களிடம் குழந்தை கொடுக்கப்படும். இதன் மூலம் ஏலம் எடுப்பவர்களுக்கு குழந்தை பிறக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. இப்படிப்பட்ட வித்தியாசமான அங்காள பரமேஸ்வரி அம்மன் திருவிழா காட்டு நிமிலி கிராமத்தில் வெகுவிமரிசையாக ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்று வருகிறது. 

 

விழாவில் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு அங்காளம்மனை தரிசித்து தங்கள் வேண்டுதலை நிறைவேற்றிட வழிபட்டு செல்கிறார்கள். 
 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பாகிஸ்தானில் பழங்கால இந்து கோவில் இடித்து தகர்ப்பு!

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
Demolition of a Historic Hindu temple in Pakistan!

இந்தியா - பாகிஸ்தான் பிரிவதற்கு முன்னாள், ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் எல்லையொட்டி, கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் ‘கைபர் கோவில்’ என்ற பழங்கால இந்து கோவில் ஒன்று செயல்பட்டு வந்தது. அதன் பின்பு, 1947ஆம் ஆண்டில் இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்ததற்குப் பின்னால், அங்குள்ள சிறுபான்மையின மக்களான இந்து மக்கள், இந்தியாவிற்கு புலம் பெயர்ந்து வந்தனர்.

இதனால், 1947ஆம் ஆண்டு முதல், அந்த இந்து கோவிலுக்குள் பக்தர்கள் யாரும் உள்ளே சென்று வழிபடவில்லை என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக, அந்த கோவில் மூடப்பட்டுள்ளது. காலப்போக்கில் இந்த கோவிலில் உள்ள செங்கற்கள் ஒவ்வொன்றாக விழுந்து, அந்த கோவில் சிதிலமடைந்து காட்சியளித்துள்ளது.

இந்த நிலையில், அந்தப் பழமையான இந்து கோவில், கடந்த 10 நாட்களுக்கு முன்பு முழுமையாக இடிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த கோவில் அமைந்திருந்த இடத்தில் புதிதாக வர்த்தக வளாகம் ஒன்று அமைக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் குறித்து, பாகிஸ்தான் இந்து கோவில் நிர்வாகக் குழு கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து பாகிஸ்தான் இந்து கோவில் நிர்வாகக் குழு கூறியதாவது, ‘முஸ்லிம் அல்லாதவர்களுக்கு மத முக்கியத்துவம் வாய்ந்த வரலாற்று கட்டிடங்களின் பாதுகாப்பு மற்றும் மறுசீரமைப்பை உறுதி செய்வது மாவட்ட நிர்வாகம் மற்றும் சம்பந்தப்பட்ட அரசுத் துறைகளின் பொறுப்பாகும்’ என்று கூறியுள்ளது.

Next Story

தேர்த் திருவிழா; மின்சாரம் தாக்கி 15 குழந்தைகள் காயம்

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
Andhra Pradesh Kurnool car festival incident

தேர்த் திருவிழாவின் போது மின்சாரம் தாக்கி 15 குழந்தைகள் காயமடைந்துள்ளனர்.

ஆந்திர பிரதேசம் மாநிலம் கர்னூல் மாவட்டம் சின்ன தெகூர் கிராமத்தில் நடந்த உகாதி விழாவையொட்டி ஆஞ்சநேயர் கோயிலில் தேர்த் திருவிழா நடைபெற்றது. அப்போது தேர் மீது வயர் உரசி தேரில் மின்சாரம் பாய்ந்துள்ளது. இந்த விபத்தில் மின்சாரம் தாக்கியதில் 15 குழந்தைகள் காயமடைந்தனர். இதனையடுத்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக குழுந்தைகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தத் தகவலை கர்னூல் கிராமப்புற காவல் நிலைய காவலர் கிரண் குமார் உறுதிப்படுத்தியுள்ளார். தேர்த் திருவிழாவின் போது மின்சாரம் தாக்கி 15 குழந்தைகள் படுகாயமடைந்த சம்பவம் ஆந்திராவில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக கடந்த மார்ச் மாதம் 8 ஆம் தேதி (08.03.2024) ராஜஸ்தான் மாநிலம் கோட்டா அருகில் உள்ள காளிபஸ்தி என்ற இடத்தில் சிவராத்திரி விழா முன்னேற்பாடுகள் நடைபெற்று வந்தன. அங்கிருந்த சிறுவர்கள் கலசத்தில் தண்ணீர் எடுக்கச் சென்றுள்ளனர். அப்போது சிறுவர்கள் எடுத்துச் சென்ற கொடி கட்டிய இரும்புக் குழாய், உயரழுத்த மின்கம்பி மீது உரசியது. இதனால் சிறுவர்கள் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் 17 சிறுவர்கள் படுகாயமடைந்தது குறிப்பிடத்தக்கது.