BIRTH CERTIFICATE CHILDREN NAME REGISTER TN GOVT

Advertisment

பிறப்பு சான்றிதழில் குழந்தையின் பெயரை பதிவு செய்ய மேலும் 5 ஆண்டுகள் அவகாசம் அளித்தது தமிழக அரசு.

01/01/2000- க்கு முன் பிறந்த குழந்தைகளின் பெயரை பதிவு செய்ய தவறியவர்களுக்கு மேலும் 5 ஆண்டுகள் அவகாசம் அளிக்கப்படுகிறது. 31/12/2019-ல் முடிந்த நிலையில் இந்திய தலைமை பதிவாளர் மேலும் 5 ஆண்டுகள் அவகாசம் வழங்கியுள்ளார். வெளிநாடு வாழ் இந்தியர்கள், உயர் கல்விக்காக வெளிநாடு செல்லும் மாணவர்களின் நலன் கருதி அவகாசம் நீட்டிக்கப்படுகிறது. பிறப்பு பதிவு செய்யப்பட்டதிலிருந்து 12 மாதத்திற்குள் குழந்தைப் பெயரை கட்டணமின்றி பதிவு செய்துக் கொள்ளலாம். ஓராண்டுக்கு பின் குழந்தையின் பெயரை 15 ஆண்டுகளுக்குள் உரிய தாமத கட்டணம் செலுத்திப் பதிவு செய்திடலாம். குழந்தையின் பெயரை பதிவு செய்ய வி.ஏ.ஓ., பேரூராட்சி செயல் அலுவலர், துப்புரவு- சுகாதார ஆய்வாளர்களை அணுகலாம். இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.