Skip to main content

மாங்குரோவ் காடுகளில் பறவைகள் கணக்கெடுப்பு பணி

Published on 30/01/2023 | Edited on 30/01/2023

 

Bird survey mission in Pichavaram mangrove forest

 

சிதம்பரம் அருகே பிச்சாவரம் மாங்குரோவ் காடுகளில் தமிழ்நாடு வனத்துறை சார்பில் 2 நாட்கள் பறவைகள் கணக்கெடுப்பு பணி நடைபெற்றது. 

 

இதில் கடலூர் மாவட்ட உதவி வனப்பாதுகாவலர் பாலசுப்பிரமணியன் மேற்பார்வையில் பிச்சாவரம் வனச்சரக அலுவலர் கமலக்கண்ணன் தலைமையில் வனவர் அருள்தாஸ், வனக்காப்பாளர்கள் ராஜேஷ்குமார், சரண்யா, அபிராமி, சரளா, வனக்காவலர்கள் பாலகிருஷ்ணன், படகு ஓட்டுநர் முத்துக்குமரன், அண்ணாமலை பல்கலைக்கழக கல்லூரி கடல்வாழ் உயிரின பாடப்பிரிவு மாணவர்கள், பறவைகள் ஆர்வலர்கள் ஆகியோர் அடங்கிய 5 குழுக்கள் அமைக்கப்பட்டு பிச்சாவரம் மாங்குரோவ் காட்டுப்பகுதியில் பறவைகள் கணக்கெடுப்பு பணி  நடைபெற்றது. 

 

இந்த கணக்கெடுப்பில் 83 வகையான பறவைகள் ஆயிரத்திற்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் இருந்துள்ளன. இவற்றில் 15க்கும் மேற்பட்ட வெளிநாட்டு பறவைகள் கண்டறியப்பட்டன. கணக்கெடுப்பில் கலந்து கொண்டவர்களுக்கு வனத்துறை சார்பில் பங்கேற்றதற்கான சான்றிதழ் வழங்கப்பட்டது.

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

கஞ்சா போதையில் பெட்ரோல் திருட்டு; தட்டிக் கேட்டால் மிரட்டல்- அச்சத்தில் பொதுமக்கள்

Published on 10/06/2024 | Edited on 10/06/2024
Gasoline theft under the influence of ganja; Intimidation on knocking - public in fear

                                                      கோப்புப்படம் 

சிதம்பரம் பகுதியில் கஞ்சா போதையில் நள்ளிரவில் வீடுகளில் நிறுத்தி வைத்திருக்கும் வாகனங்களில் பெட்ரோல் திருடும் இளைஞர்களால் பொதுமக்கள் வேதனை அடைந்துள்ளனர்.

சிதம்பரம் அருகே கொத்தங்குடி ஊராட்சிக்கு உட்பட்ட கதிர்வேல் நகர், வரதராஜ நகர், தமிழன்னை நகர், கிருஷ்ணமூர்த்தி நகர், குருதேவ் நகர், முத்தையா நகர் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட நகர்கள் உள்ளது. இந்த நகரில் வசிக்கும் பொதுமக்கள் இரவு நேரங்களில் அவர்களது வீட்டு வாசலில் அல்லது வீட்டிற்கு உள்ளே உள்ள போர்டிகோவில் அவர்களது இருசக்கர வாகனங்களை நிறுத்தி வைக்கிறார்கள். இதில் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து நள்ளிரவு நேரத்தில் இருசக்கர  வாகனங்களில் தொடர்ந்து பெட்ரோலை திருடி செல்கின்றனர். இதனால் காலையில் எழுந்து வாகன உரிமையாளர்கள் அதிர்ச்சி அடைகிறார்கள்.  மேலும் காலை நேரத்தில் அவசர வேலையாக வெளியில் செல்பவர்களுக்கு இது பெரும் வேதனையை ஏற்படுத்துகிறது.

இந்நிலையில் சனிக்கிழமை நள்ளிரவு கொத்தங்குடி ஊராட்சிக்குட்பட்ட சரஸ்வதி அம்மாள் நகரில் உள்ள ஒரு வீட்டில்  இருசக்கர வாகனத்தில் 3 பேர் வந்து அதில் ஒருவர் வீட்டின் சுவர் மீது எறி குதித்து அங்கிருந்த 2 இருசக்கர வாகனத்தில் பெட்ரோலை பிடித்துள்ளனர். அப்போது அந்த இடத்தில் நாய்கள் குறைத்துள்ளது.  வீட்டின் உரிமையாளர் கதவைத் திறந்து வெளியே வந்து பார்த்தபோது அவர்கள் பாட்டிலை போட்டுவிட்டு மதில் சுவர் மீது எகிறி குதித்து ஓடி 3 பேரும் இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்றனர். அப்போது வீட்டின் உரிமையாளரை மிரட்டும் தோணியில் சைகை காட்டி சென்றனர். இவர்கள் மது மற்றும் கஞ்சா போதையில் இரவு நேரத்தில் இது போன்று தொடர்ந்து சுற்றுகிறார்கள் என்றும் பல்வேறு வீடுகளில் உள்ள இருசக்கர வாகனங்களில்  தொடர்ந்து பெட்ரோல் திருடி வருகிறார்கள். இரவு நேரத்தில்  போதையில் இருப்பதால் இவர்களிடம் இது குறித்து கேட்பதற்கு பொதுமக்கள் அச்சமடைகிறார்கள் எனவே காவல்துறையினர் இதை கண்காணித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் கோரிக்கை விடுகின்றனர்.

இதேபோல் கடந்த 20 நாட்களுக்கு முன்பு சிதம்பரம் நகரத்தில் துறவாடி தெருவில் நள்ளிரவில் இருசக்கர வாகனத்தில் பெட்ரோல் திருடிய ஒருவர் பெட்ரோல் பிடித்துக் கொண்டு அருகே இருந்த கார் மற்றும் இருசக்கர வாகனத்தை தீ வைத்து கொளுத்தி விட்டார். பின்னர் அவரை காவல்துறையினர் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா மூலம் அடையாளம் கண்டு கைது செய்து சிறையில் அடைத்தனர் . இதேபோன்று பெரும் அசம்பாவிதம் நடைபெறுவதற்கு முன்பு காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களின் தொடர் கோரிக்கையாக உள்ளது.

Next Story

ஊருக்குள் புகுந்த ஒற்றை யானை ;10 மணிநேரம் போராடி விரட்டிய வனத்துறை

Published on 15/05/2024 | Edited on 15/05/2024
A single elephant entered the town; the forest department fought for 10 hours to chase it away

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இங்கு யானை, புலி, சிறுத்தை, கரடி, காட்டெருமை உட்பட பல்வேறு வன விலங்குகள் வசித்து வருகின்றன. குறிப்பாக யானைகள் அதிக அளவில் வசித்து வருகின்றன. தற்போது வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவுவதால் வனப்பகுதியில் உள்ள நீர்நிலைகள் வறண்டு காணப்படுகிறது. இதனால் வனவிலங்குகள் உணவு தண்ணீரைத் தேடி கிராமத்துக்குள் வருவது தொடர்கதை ஆகி வருகிறது.

குறிப்பாக கடந்த சில நாட்களாகவே யானைக் கூட்டங்கள், ஒற்றை யானைகள் வனப் பகுதியை விட்டு வெளியேறி கிராமத்துக்குள் புகுந்து விளை நிலங்களை தொடர்ந்து சேதப்படுத்தி வருகிறது.  ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள எண்ணமங்கலம் கிராமம், செலம்பூர் அம்மன் கோவில் வனப்பகுதி ஒட்டி அமைந்துள்ளது. இந்நிலையில் வனப்பகுதியில் இருந்து நேற்று அதிகாலை தண்ணீர் மற்றும் உணவைத் தேடி வெளியேறிய ஒற்றை ஆண் காட்டு யானை அங்குள்ள விவசாய நிலங்களுக்குள் புகுந்து அங்கும் இங்கும் ஓடியது.

இதைக்கண்ட விவசாயிகள் அந்தியூர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து வனத்துறையினர் மற்றும் விவசாயிகள் ஒன்றிணைந்து சத்தம் எழுப்பி யானையை வனப்பகுதிக்குள் விரட்ட முயன்றனர். இதனால் ஆவேசமடைந்த அந்த ஒற்றை யானை ஒவ்வொரு விவசாய தோட்டத்துக்குள் புகுந்து விவசாய நிலங்களை சேதப்படுத்தியது. மேலும் அங்கு விவசாயிகள் மக்காச்சோளம், முட்டைக்கோஸ் அதிக அளவில் பயிரிட்டிருந்தனர். அந்தத் தோட்டத்துக்குள் யானை புகுந்து பயிர்களை சேதப்படுத்தியது.  சுமார் 10 மணி நேரம் அந்த ஒற்றைக் காட்டு யானை வனத்துறையினர் மற்றும் விவசாயிகளுக்கு போக்குக் காட்டி அங்கும் இங்கும் ஓடியது. பின்னர் ஒரு வழியாக அந்த ஒற்றைக் காட்டு யானை வனப்பகுதிக்குள் சென்றது. அதன் பின்னரே விவசாயிகள் மற்றும் வனத்துறையினர் நிம்மதி பெரும் மூச்சு விட்டனர்.

இதேபோல் சத்தியமங்கலம் வனச்சரகத்திற்குட்பட்ட கொண்டப்ப நாயக்கன்பாளையம் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஆண் காட்டு யானை ஒன்று பெரும்பள்ளம் அணை அருகே உள்ள தரிசு நிலங்களில் பகல் நேரங்களில் நடமாடி வருகிறது. உடல் நலம் குன்றியதால் தீவனம் ஏதும் உட்கொள்ளாமல் பகல் நேரங்களில் தரிசு நிலைகளில் சுற்றி வருகிறது. இதனால் அந்தப் பகுதியில் கால்நடைகளை மேய்ப்பவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். குடிநீருக்காக அந்த யானை கடந்த சில நாட்களாக பெரும்பள்ளம் மலைப் பகுதியில் சுற்றி வருகிறது. எனவே அந்தப் பகுதியில் செல்பவர்கள் கவனத்துடன் செல்ல வேண்டும் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.