Skip to main content

முட்டை, கறிக்கோழி விலை மீண்டும் சரிவு!

Published on 09/01/2021 | Edited on 09/01/2021

 

bird flu, chicken, eggs price decrease

 

சில நாட்களுக்கு முன்பு கேரள மாநிலம் ஆலப்புழாவில் வாத்துகள் கொத்துக் கொத்தாக உயிரிழந்ததில் தொடங்கிய பறவைக் காய்ச்சல், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், இமாச்சல பிரதேசம், ஹரியாணா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களுக்கும் அதிவேகமாக பரவியது. இதனால் மாநில எல்லைகள் தீவிர கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டன. தமிழக அரசும் கேரள எல்லைகளைக் கண்காணித்து, கேரளாவிலிருந்து கோழிகள், வாத்துகள்  ஆகியவற்றைக் கொண்டு வருவதற்கு தடை விதித்தது. 

 

இந்நிலையில், பறவைக்காய்ச்சல் காரணமாக, கேரளா உள்ளிட்ட மாநிலங்களுக்கு நாமக்கல் மாவட்டத்திலிருந்து கோழிகள், முட்டைகள் கொண்டு செல்வது தடைப்பட்டுள்ளதால் கறிக்கோழிகளின் விலை கடந்த சில நாட்களாகக் குறைந்து வருகிறது. 

 

அதன்படி, நாமக்கல் பண்ணைகளில் முட்டை கொள்முதல் விலை மேலும் 25 காசுகள் குறைந்து ரூபாய் 4.60 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஒரு கிலோ கறிக்கோழி விலை ரூபாய் 6 குறைந்து ரூபாய் 72- க்கு விற்பனைச் செய்யப்படுகிறது. 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சிலிண்டர் விலை உயர்வு

Published on 01/03/2024 | Edited on 01/03/2024
Increase in cylinder price

வர்த்தக சிலிண்டரின் விலை திடீரென உயர்த்தப்பட்டுள்ளது.

சென்னையில் வர்த்தக பயன்பாட்டுக்கு பயன்படுத்தப்படும் சிலிண்டர் விலை ஒன்றுக்கு 23 ரூபாய் 50 பைசா உயர்ந்து மொத்தமாக ரூபாய் 1960.50க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேநேரம் வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் நேரங்களில் சிலிண்டரின் விலை குறைப்பு, பெட்ரோல் விலை குறைப்பு போன்ற நடவடிக்கைகளில் அரசுகள் ஈடுபடும். காரணம் தேர்தல் நேரங்களில் சிலிண்டர் விலை உயர்வு, பெட்ரோல் விலை உயர்வு ஆகியவை மக்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தும் வகையில் இருக்கும் என்பதால் குறைப்பு நடவடிக்கைகள் ஈடுபடுவது வழக்கம். இந்த நிலையில் நாடாளுமன்ற தேர்தல் தேதிக்கு அரசியல் கட்சிகள் காத்திருக்கும் சூழலில் சென்னையில் வர்த்தக சிலிண்டரின் விலை 23 ரூபாய் அதிகரித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

3 மாதங்களுக்குக் கோழி இறைச்சிக் கடைகளுக்குத் தடை!

Published on 16/02/2024 | Edited on 16/02/2024
Ban on chicken shops for 3 months in andhra

ஆந்திரா மாநிலம், நெல்லூர் மாவட்டத்தில் உள்ள கும்மிடிதிப்ப கிராமத்தில் பறவைக் காய்ச்சல் காரணமாக, அங்கு பண்ணைகளில் வளர்க்கப்பட்டு வந்த பல்லாயிரக்கணக்கான கோழிகள் உயிரிழந்துள்ளன. 

இதனையடுத்து, பறவைக் காய்ச்சல் மேலும் பரவாமல் தடுக்கவும் மனிதர்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் தவிர்க்கவும் நெல்லூர் மாவட்ட ஆட்சியர் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அதன் பின்னர், பறவைக் காய்ச்சல் பரவி கோழிகள் இறந்த ஊரிலிருந்து 1 கி.மீ சுற்றளவுக்குள் இருக்கும் கிராமங்கள் மற்றும் நகரங்களில் மூன்று மாதங்களுக்கு கோழி இறைச்சி விற்பனைக்கு, மாவட்ட ஆட்சியர் தடை விதித்து உத்தரவிட்டார். 

மேலும், அந்தப் பகுதிகளில் 3 மாதங்களுக்கு கோழி இறைச்சி விற்பனை கடைகளைத் திறக்கவும் தடை விதித்தும், ஒரு கி.மீ முதல் 10 கி.மீ சுற்றளவுக்குள் இருக்கும் பகுதிகளில் வெளியூர்வாசிகள் கோழி இறைச்சியை வாங்கிச் செல்ல 15 நாட்கள் தடை விதித்தும் உத்தரவிட்டார்.