A bike that run on the road automatically; Terrible people

ஓட்டுநர் இன்றி இருசக்கர வாகனம் மட்டும் சாலையில் தனியாக சென்றசிசிடிவி காட்சி சமூக வலைத்தளங்களில் வெளியாகி மிரள வைத்துள்ளது.

நாமக்கல் மாவட்டம் வெப்படை அருகே உள்ளது மக்கிரி பாளையம் பிரிவு சாலை. மோடமங்கலம் என்ற பகுதியில் இருந்து சௌந்தரராஜன்-நந்தினி என்று தம்பதியினர் இருசக்கர வாகனத்தில் மக்கிரி பாளையம் பிரிவு சாலை நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். அப்பொழுது சங்ககிரியில் இருந்து வந்த மாருதி எர்டிகா கார் ஒன்று சௌந்தரராஜன் நந்தினி பயணித்த இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.

காரி மோதிய வேகத்தில் இரு சக்கர வாகனத்தில் இருந்து இருவரும் கீழே விழுந்தனர். அவர்கள் கீழே விழுந்து விட்ட நிலையில் பைக் மட்டும் சாலையில் தனியாக சில மீட்டர் தூரம் ஓடியது. இந்த காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவாகியுள்ளது. பார்ப்பதற்கு தானாகவே பைக் சாலையில் செல்வது போன்ற இந்த காட்சிகள் இடம்பெற்றுள்ளது. சாலையில் இருயாரும் இயக்காமல்சக்கர வாகனம் செல்வதை பார்த்த மக்கள் என்ன விசித்திரம் என சாலையை நோக்கி ஓடினர். ஆனால் சிறிது நேரத்தில் நிலை குலைந்த பைக் சாலையின் தடுப்புச் சுவர் மீது மோதி கீழே விழுந்தது.