Bike private bus accident police arrested bus driver

கரூர் மாவட்டம், குளித்தலை மணதட்டை வள்ளுவர் நகரைச் சேர்ந்தவர் கூழையின் மகன் கந்தன்(55) இவரது வீட்டின் அருகில் உள்ள சின்னையன் என்பவரின் மகன் மணிவேல் (28) இவருக்கு திருமணம் ஆகவில்லை. இவர்கள் இருவரும் விவசாய கூலி வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று இரவு குளித்தலை அருகே உள்ள வளையப்பட்டி கிராமத்தில் திருவிழாவுக்காக சென்றுவிட்டு மீண்டும் திருச்சி கரூர் பைபாஸ் ரோட்டில் குமாரமங்கலம் வழியாக குளித்தலை நோக்கி டூவீலரில் வந்து கொண்டிருந்தனர்.

Advertisment

அப்போது, அவ்வழியாக ராமநாதபுரத்தில் இருந்து பெங்களூர் வரை சென்று கொண்டிருந்த ஆம்னி பஸ், இவர்களின் இருசக்கர வாகனத்தின் பின்னால் மோதியது. இதில், கந்தன் சம்பவ இடத்திலேயே பலியானார். அதனைத் தொடர்ந்து படுகாயமடைந்த மணிவேலை ஆம்புலன்ஸ் மூலம் குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். ஆனால், அவரும் பரிதாபமாக இறந்தார். அதேசமயம், அந்த ஆம்னி பேருந்தை குளித்தலை போலீசார் பின் தொடர்ந்து சென்று தொட்டியத்தில் மடக்கி பிடித்து காவல்நிலையத்திற்கு கொண்டு சென்றனர். மேலும் இது இதுகுறித்து குளித்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.