Published on 24/08/2022 | Edited on 24/08/2022

தஞ்சை அருகே பைக்கும் லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே லாரியும், பைக்கும் நேருக்கு நேர் மோதி கோரவிபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் இளங்கோவன், முருகேசன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், தனபால் என்பவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்த விபத்து சம்பவம் அங்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.