தனியார் தொலைக்காட்சியில் கமல் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி 85 நாட்களுக்கு மேல் கடந்து சென்று கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சி இரண்டு சீசன்களை கடந்து தற்போது மூன்றாவது சீசன் நடைபெற்று கொண்டிருக்கிறது. இரண்டு சீசன்களை போலவே மூன்றாவது சீசனும் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. பிக் பாஸ் சீசன் 3ல் மொத்தம் 16 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர். இந்த நிகழ்ச்சியில் பாத்திமா பாபு, மோகன் வைத்யா, வனிதா, மீரா மிதுன், ரேஷ்மா, சரவணன், சாக்ஷி, அபிராமி, மதுமிதா மற்றும் கஸ்தூரி இதுவரை போட்டியிலிருந்து வெளியேறியுள்ளனர். இதனையடுத்து சேரன், ஷெரின், கவின், லாஸ்லியா, சாண்டி ஆகியோர் இந்தவாரம் எவிக்சன் லிஸ்டில் உள்ளனர்.
மேலும் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் நடக்கும் டாஸ்க்குகளில் எந்த போட்டியாளர் வெற்றி பெறுகிறரோ அவர் நேரடியாக இறுதி சுற்றுக்கு செல்வார் என்றும் பிக் பாஸ்ஸில் கூறியுள்ளனர். இந்த டாஸ்க்குகளில் தர்ஷன் முதலிடத்தில் உள்ளார் என்பது குறிப்படத்தக்கது. மேலும் டாஸ்க் ஒன்றின் போது, சுய சிந்தனையும், தனித்தன்மையும் இல்லாமல் கூட்டத்தில் ஒளிந்துகொண்டு வாழும் நபராக கவின் உள்ளார் என்று தர்ஷன் கூறியுள்ளார். அதோடு, மக்களின் அனுதாபத்திற்காக நடிக்கும் பிரபலங்களாக இயக்குநர் சேரனையும், கவினையும் தர்ஷன் கூறியது சேரனுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதன் பின்பு அதற்கான விளக்கத்தை சேரன் பிக் பாஸ்ஸிடம் கேட்டுள்ளார். தர்ஷன் இப்படி கூறியது சேரனுக்கும், கவினுக்கும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.