Skip to main content

தொடர் மழையால் புவனகிரி-குறிஞ்சி பாடி சாலை துண்டிப்பு!

Published on 02/11/2021 | Edited on 02/11/2021
Bhuvanagiri-Kurinjipadi road cut off due to continuous rains

 

கடலூர் மாவட்டம், புவனகிரி - குறிஞ்சிப்பாடி நெடுஞ்சாலையில் சாத்தப்பாடி கிராமத்தின் அருகே வடிகால் வாய்க்கால் பாலம் தாழ்வாக இருந்ததது. இதனை  புதிய உயர்மட்ட பாலமாகக்  கட்டும் பணிகள்  நடைபெற்று வருகின்றது.  பாலம் கட்டுவதற்கான அடிப்படை பணிகள் கடந்த 1 ஆண்டுகளாக  நடைபெற்று வருகிறது.

 

இந்த நிலையில் சிதம்பரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் கடந்த இரண்டு நாட்களாகக் கன மழை பெய்து வருகிறது. இதனால் நீர் நிலைகள் நிரம்பி வருகின்றது. கடலூர் மாவட்டத்தில் பள்ளிகளும் கடந்த இரண்டு நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் சாத்தப்பாடி கிராமத்தில் உள்ள பெரிய ஏரி வாய்க்கால் கன மழையால் நிரம்பி பாலத்தின் மீது மழைநீர் செல்வதால் பாலம் கட்டுவதற்காக அமைக்கப்பட்டுள்ள தற்காலிக தரைமட்ட பாலம் உடையும் நிலை ஏற்பட்டது.

 

இதனையறிந்த நெடுஞ்சாலைத்துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திங்கள் கிழமை இரவில் இருந்து  புவனகிரி- குறிஞ்சிப்பாடி சாலையில் போக்குவரத்தை நிறுத்தியுள்ளனர்.  மணல் மூட்டைகளைக் கொண்டு சாலையின் மேல் செல்லும் தண்ணீரைத் தடுத்து நிறுத்தி பொக்லைன் இயந்திரம் மூலம் தண்ணீர் விரைவில் வடிவதற்கான பணிகளைச் செய்து வருகிறார்கள். இதனால் அந்த வழியாகச் செல்லும் பேருந்துகள் மற்றும் வாகனங்கள் 10 கி.மீ தூரம் சுற்றிக்கொண்டு சேத்தியாதோப்பு குறுக்குரோடு வழியாகச் செல்கிறது. தற்காலிகப் பாலத்தைச் சீரமைக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் நெடுஞ்சாலைத்துறையினர் மூலம் எடுக்கப்பட்டு வரப்படுகிறது. 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்; அதிமுக நிர்வாகி உள்ளிட்ட 4 பேர் கைது!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Ambedkar statue incident 4 people including ADMK executive 

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. அந்தப் பகுதிக்கு இன்று (24.04.2024) அதிகாலை இரு சக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் சிலர் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீச முயற்சி செய்துள்ளனர். அப்போது மர்மநபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலை மீது படாமல் அதற்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீது பட்டு வெடித்துள்ளது. அதே சமயம் அம்பேத்கர் சிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அம்பலவாணன் பேட்டை, குள்ளஞ்சாவடி பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த வெற்றி (வயது 21), கிருஷ்ணகுமார் (வயது 21), அதிமுக இளைஞர் பாசறை கிளை கழக செயலளார் சதீஷ் (வயது 29), விஜயராஜ் (வயது 22) ஆகிய 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதே சமயம் அம்பேத்கர் சிலை அருகே குண்டு வீசிய இடத்தை தூய்மைப்படுத்திய விசிகவினர் பால் அபிஷேகம் செய்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 

Next Story

அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டு வீச்சு?

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Cuddalore Dt Kullanjavadi Near Ambedkar statue incident

அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டு வீச முயற்சித்த சம்பவம் கடலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. அந்தப் பகுதிக்கு இன்று அதிகாலை வந்த மர்மநபர்கள் சிலர் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீச முயற்சி செய்துள்ளனர். அப்போது மர்மநபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலை மீது படாமல் அதற்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீது பட்டு வெடித்துள்ளது. அதே சமயம் அம்பேத்கர் சிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அபப்குதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அம்பலவாணன் பேட்டை, குள்ளஞ்சாவடி பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.