சமீப காலமாக உயிர் பலிகளின் புகழிடமாக கல்வி நிறுவங்கள் மாறி வருவது மிகுந்த வேதனைக்குரியதாக இருக்கிறது. சமீபத்தில் சென்னை ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை, திருச்சி கே.கே.நகர் அய்மான் கல்லூரியில் ஜார்கண்ட மாணவி ஜெப்ரான்பர்வீன் தற்கொலை, உறையூர் நர்சிங் கல்லூரியில் சுனித்தா தற்கொலை இன்று பாரதிதாசன் பல்கலைகழகத்தில் நிலவியல்துறை இரண்டாம் மாணவி நித்யா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) பினாயில் குடித்து தற்கொலை முயற்சி என அடுத்தடுத்த மாணவிகள் தற்கொலை கல்வி நிலையங்களில் நடக்கும் டார்ச்ச தான் என்பதையே உணர்த்துகிறது.
திருச்சி பாரதிதாசன் பல்கலைகழகத்தில் பினாயில் குடித்து உயிருக்கு போராடி அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கும் மாணவி தன் கைப்பட இரண்டு பக்க கடிதம் வெளியாகி பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த கடித்தில்,
Saro, Gaja சாரி டா உங்களை விட்டு நான் போறேன். அதனால முடியல, யாராலயும் நம்ம HOD சாருக்கு எதிர்த்து ஒன்னும் பண்ண முடியாது. எனக்கு best friend நீ தான் Gaja உனக்கு 1 st year வந்தப்பவே உனக்கு எந்த ஹெல்ப் பண்ண முடியல டி, எங்க வீட்ல எவ்வளவு சொன்னாலும் நீ Cyb ta இரு உன்னை எதுவும் சொல்லவே இல்ல அதான் நீ அமைதியா படிச்சா போதும் சொன்னாங்க.
நம்மளோட பிராப்ளம் பற்றி வீட்டில் சொன்னாலும் புரிஞ்சிக்கவே மாட்டேங்கிறாங்க. ஏன்டா நமக்கு HOD சார் இப்படி பண்றாங்க, நாம எல்லோரும் பிரண்ட்ஸ் தானே நம்ம கிளாஸ்ல பாய்ஸ் கூட பேசறது HOD y தப்பா பேசறாங்க.
லாஸ்ட் இயர் இன்னும் இப்படித்தான் கஷ்டப்படுத்தி நாங்க செய்யாத தவறுக்காக நீ கஷ்டப் படுத்த மாதிரி இப்போ நம்ம கிளாஸ்ல எல்லோரும் பீல் பண்றாங்க. குறிப்பா இப்ப பிராப்ளத்துல மாட்டின ஆறு பாய் டி ….. எனக்கு எப்பவும் என்னோட கஷ்டத்திலும் சந்தோஷங்களையும் கூட இருந்த பிரண்ட்ஸ் நீங்க தான்டா நீங்க எல்லாம் கஷ்டப்படுறதை என்னால பாக்க முடியல. என்னோட நிலை யாருக்கும் வரக்கூடாது. நான் போனதுக்கு பிறகு அவரை இப்படி கொடுமைப்படுத்துற HOD மாறுவாரான்னு பார்க்கலாம் நீங்க ஹாப்பியா இருக்கணும் ஆசைப்படுறேன். நம்ம சீனியர்கள் யாரோ நமக்கு ஹெல்ப்புக்கு வரமாட்டாங்க
கம்ப்ளைன்ட் HOD சார் மேல கொடுக்கலாம்னு நினைச்சாலும் அவரை ஒன்னும் பண்ண முடியாது எனக்கு படிக்கவே பிடிக்கல, டிபார்ட்மெண்டுக்கு வரும்போது டெய்லி பயந்து பயந்து வர மாதிரி இருக்கு, நான் கிளாஸ்ல உன் கிட்ட பேசிகிட்டு இருந்ததுக்கே என்னோட அப்பா முன்னாடி உங்க பொண்ணு படிக்க மாட்டேங்குறானு சொன்னாங்க HOD sir,
கஷ்டமா இருந்துச்சு என்கிட்ட நீ என்ன கதை பேசுவனு லெட்டர் எழுதி கொடுக்க சொன்னாங்க ரொம்ப போர்ஸ் பண்ற மாதிரி இருக்கு, Yesterday நம்ம கிளாஸ் பாய்ஸ் எக்ஸாம் எழுதாம அழுதுகிட்டு இருந்தாங்க, எனக்கு எக்ஸாம் எழுத பிடிக்கவே இல்ல,
6 boys - அ இவ்வளவு கஷ்டப்படுறாங்க நாளைக்கு உங்களுக்கு இதே நிலைமைதான் முடிஞ்சா இந்த HOD, ….கிட்ட இருந்து போயிடுங்க ஓகேவா,
எல்லாரும் கஷ்டப்படுவது காரணம் HOD அகிலா Mam…எங்க வீட்ல ரொம்பக் கஷ்டப்படுவாங்க அவங்க நிற்க வைத்து யாரும் Question கேட்க கூடாதுன்னு நினைக்கிறேன் என்னோட பெற்றோரை பார்த்துக்கோங்க சாரி சாரி குட் பை மிஸ் யூ- நித்யா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்று முடிகிறது.. அந்த மாணவியின் கடிதம்.
இது குறித்து மாணவர்களிடம் பேசுகையில் மாணவி நித்யா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) இராஜபாளையம் சொந்தவூர், பாரதிதாசன் பல்கலைகழத்தில் விடுதியில் தங்கி படிக்கிறாங்க, இந்த HOD கடந்த இரண்டு மாதங்களாக மாணவிகளின் செல்போன்களை வாங்கி அதில் இருக்கும் படங்களை எல்லாம் டவுன்லோடு பண்ணி வச்சு மிரட்ட ஆரம்பிச்சு இருக்கிறார்கள். மாணவ மாணவிகள் ஜீஸ் குடிக்கும் படங்களை எடுத்து வைத்துக்கொண்டு நீ வெற எதையோ குடிக்கிற மாதிரி சொல்லிடுவேன், என்று பிரக்டிகல் மார்க்கில் குறைச்சிடுவேன் என்று சர்வாதிகாரி போன்று மிரட்டி டார்ச்சர் பண்ணியிருக்கிறார் என்கிறார்கள். இதில் உச்சக்கட்டம் மாணவி நித்யா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) பினாயில் குடித்து தற்கொலை முயற்சி செய்தது என்கிறார்கள்.
இது குறித்து நிலவியல்துறை HOD சக்திவேலிடம் மாணவி நித்யா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) கடிதம் தற்கொலை குறித்து பேசிய போது.. இந்த துறை தனிபட்ட முறையில் சிறப்பு அந்தஸ்துடன் செயல்படுகிறது. பல்கலைகழகம் முழுமைக்கும் தெரியும், ஏதோ விடுதியில் ஏற்பட்ட பிரச்சனையில் விளையாட்டுத்தனமாக பினாயில் குடித்தாக விடுதி காப்பாளர் என்னிடம் சொன்னார். நான் இது குறித்து பதிவாளருக்கு கடிதம் அனுப்பிட்டேன். நீங்கள் சொல்வது போல் நான் யாரையும் டார்ச்சர் செய்யவில்லை என்று முழுமையாக மறுத்தார்.