/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/1001_99.jpg)
திருச்சி பேட்டைவாய்த்தலை பெரியார் நகரை சேர்ந்தவர் சக்திவேல் (55). இவர் அரசுப்பேருந்து ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இவர் சனிக்கிழமை, ராம்ஜி நகரில் இருந்து ஸ்ரீரங்கம் செல்லும் அரசு நகரப்பேருந்தில் பணியிலிருந்தார். அவருடன் குளித்தலையை சேர்ந்த நடத்துனர் முருகானந்தமும் (32) பணியிலிருந்தார். பேருந்து திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையம் வழியாக சென்ற போது, அதே வழியில் ஆட்டோவில் சென்ற 4 பேர், பேருந்தை மறித்து, அவர்களைமுந்திச்செல்ல வழிவிடாமல் பேருந்தை இயக்கியதாக கூறி தகராற்றில் ஈடுபட்டனர்.
வாக்குவாதம் முற்றியதில் ஓட்டுநர் சக்திவேலையும் தடுக்க முயன்ற நடத்துநர் முருகானந்தத்தையும் தாக்கியுள்ளனர். இந்த சம்பவத்தால் பேருந்து சாலையில் நிறுத்தப்பட்டதையடுத்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது குறித்து சக ஓட்டுநர்களுடன் சக்திவேல் கன்டோன்மென்ட் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸார் வழக்குப் பதிந்து, பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநரை தாக்கிய அரியமங்கலம் பகுதியைச் சேர்ந்த மருதுபாண்டி (36), சசிக்குமார் (32) இருவரை கைது செய்தனர். மேலும் 2 பேரை தேடி வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)