Beast movie released ... Fans celebration!

Advertisment

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள திரைப்படம் 'பீஸ்ட்'. இதில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க, செல்வராகவன், யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சமீபத்தில் வெளியான இப்படத்தின் ட்ரைலர் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் திரைக்கு வர தயாராக இருந்த நிலையில் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில்வெளியானதுநடிகர் விஜய்யின் 'பீஸ்ட்' திரைப்படம். இன்று காலைவெளியான நிலையில் திரையரங்குகளில்நடனமாடியும் பட்டாசு வெடித்தும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.