A banner ad claimed 3 lives; Contractor arrested

கோவை கருமத்தம்பட்டி பகுதியில் விளம்பர பேனர் விழுந்து விபத்து ஏற்பட்டு மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் ஒப்பந்ததாரர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Advertisment

கோவை புறநகர் பகுதியில் உள்ள கருமத்தம்பட்டி அவினாசி நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள பகுதியில் ராட்சத விளம்பர பேனர்கள் வைக்கும் பணி நடைபெற்று வந்தது. ராமசாமி என்பவருக்கு சொந்தமான இடத்தில் பேனர் வைக்கும் பணிகள் நடைபெற்று வந்த நிலையில், சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த பழனிசாமி என்பவர் ஒப்பந்தம் எடுத்து பேனர் வைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார்.

Advertisment

கட்டுமான பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்த பொழுது பலத்த காற்றுடன் மழை பெய்ததால் பேனர் கட்டுவதற்கான சாரம் சரிந்து கீழே விழுந்தது. இதில் மூன்று தொழிலாளர்கள் பேனரின் அடிப்பகுதியில் சிக்கிக்கொண்டனர். சிக்கிய மூன்று பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஒப்பந்ததாரர் பழனிசாமி தலைமறைவாக இருந்தநிலையில் போலீசார் தற்போது அவரை கைது செய்துள்ளனர்.