Published on 05/11/2019 | Edited on 05/11/2019

வங்கி முறைகேடுகள் தொடர்பாக நாடு முழுவதும் 169 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றன. தமிழகம், ஆந்திரா, தெலுங்கானா, மத்திய பிரதேசம், கர்நாடகா, கேரளா, டெல்லி, குஜராத், ஹரியானா, பஞ்சாப், சண்டிகர் உள்பட 15 மாநிலங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். வங்கியில் நடைபெற்ற முறைகேடுகள் தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் 35 வழக்குகளை பதிவு செய்துள்ளன. அதேபோல் வங்கிகளில் மட்டும் சுமார் 7000 கோடிக்கும் மேல் மோசடி என்ற தகவல் வெளியாகியுள்ளது.