Skip to main content

தொட்டபெட்டா செல்ல தடை

Published on 10/09/2023 | Edited on 10/09/2023

 

nn

 

உதகையில் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றான தொட்டபெட்டா மலை சிகரத்திற்கு சுற்றுலாப் பயணிகள் செல்வதற்கு மூன்று நாட்களுக்கு தடை விதித்து மாவட்ட நிர்வாகமும், சுற்றுலா துறையும் உத்தரவு பிறப்பித்துள்ளது.

 

நீலகிரி மாவட்டத்தில் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்று தொட்டபெட்டா சிகரம். தொட்டபெட்டா சாலையை சீரமைக்க வேண்டும் என பல்வேறு தரப்புகளில் இருந்து கோரிக்கைகள் எழுந்த நிலையில், கோத்தகிரி முதல் தொட்டபெட்டா சிகரம் வரை உள்ள சுமார் மூன்று கிலோ மீட்டர் நீளம் கொண்ட சாலையை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலத்தில் சாலை சீரமைப்பு காரணமாக நாளை முதல் தொடர்ச்சியாக மூன்று நாட்களுக்கு தொட்டபெட்டா மலை சிகரத்திற்கு செல்வதற்கான பாதை தற்காலிகமாக மூடப்படும் என சுற்றுலாத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஸ்ட்ராங் ரூம் சிசிடிவி கேமராக்கள் செயலிழப்பு; நீலகிரியில் பரபரப்பு

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Malfunction of strong room CCTV cameras; Excitement in the Nilgiris

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.
 

தமிழகத்தில் தேர்தல் மக்களவை தேர்தல் முடிந்திருக்கும் நிலையில் வாக்கு பெட்டிகள் அனைத்தும் ஸ்ட்ராங் ரூம் எனப்படும் ஐந்து அடுக்கு பாதுகாப்பு அறைக்குள் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நீலகிரியில் ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் திடீரென செயலிழந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

நீலகிரி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளது. 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அருகிலுள்ள அறையிலிருந்து கண்காணிப்பதற்காக அனைத்து அரசியல் கட்சியினருக்கும் பொதுவாக ஒரு அறை ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் இன்று மாலை திடீரென 173 சிசிடிவி கேமராக்கள் செயலிழந்தது. பின்னர் சுமார்  20 நிமிடங்களுக்கு பிறகு மீண்டும் சிசிடிவி கேமராக்கள் வழக்கம் போல் செயல்பட தொடங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

அதீத வெப்பம் காரணமாக சிசிடிவி கேமராக்கள் செயலிழந்திருக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையில் சிசிடிவி காட்சிகள் திடீரென செயலிழந்தது அரசியல் கட்சியினர் இடையே பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. நீலகிரியில் திமுக சார்பில் ஆ.ராசாவும், அதிமுக கூட்டணி சார்பில் லோகேஷ் தமிழ்ச்செல்வனும், பாஜக கூட்டணியில் எல்.முருகனும், நாம் தமிழர் கட்சி சார்பாக ஜெயக்குமாரும் போட்டியிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.

Next Story

சுற்றுலா வந்தவர்களின் கார் பயங்கர விபத்து; 3 பேர் உயிரிழப்பு

Published on 21/04/2024 | Edited on 21/04/2024
Tourists' car tragic accident; 3 people lost their lives

விழுப்புரத்தில் கட்டுப்பாட்டை இழந்த கார் நெடுஞ்சாலை பகுதியில் உள்ள சென்டர் மீடியத்தில் மோதியதோடு எதிர்ப்புறம் சென்ற கார் மீது மோதி பயங்கர விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த சம்பவத்தில் மூன்று பேர் உயிரிழந்த சோக நிகழ்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த மணிஷ் என்பவர் தன்னுடைய நண்பர் கீர்த்தி மற்றும் விஜயகுமார் ஆகியோருடன் புதுச்சேரிக்கு சுற்றுலாவிற்கு சென்றுள்ளார். பின்னர் சுற்றுலாவை முடித்துவிட்டு ஆந்திராவிற்கு மீண்டும் திரும்பிக் கொண்டிருந்தனர். கார் புதுச்சேரி-திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மொளசூர் பகுதியில் சென்று கொண்டிருந்தது. காரை விஜயகுமார் ஓட்டிக் கொண்டிருந்தார். அப்பொழுது காரின் டயர் வெடித்ததில் கட்டுப்பாட்டை இழந்த கார் தேசிய நெடுஞ்சாலையின் சென்டர் மீடியத்தில் மோதி சென்னையில் இருந்து தைலாபுரம் நோக்கிச் சென்று கொண்டிருந்த காரில் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது.

இந்த சம்பவத்தில் காரை ஓட்டிவந்த விஜயகுமார் பலத்த காயமடைந்தார். மணீஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், கீர்த்தி திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால்  செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார். சென்னையில் இருந்து தைலாபுரம் நோக்கி வந்த காரில் பயணித்த பழனி என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். அவரின் மனைவி ஜெயந்தி படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.