/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/T456666_3.jpg)
கோயில்கள், மசூதிகள், தேவாலயங்கள் திறப்பு குறித்து தமிழ்நாடு அரசின் மருத்துவத்துறை, வருவாய் பேரிடர் நிர்வாகத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், வாரந்தோறும் வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை ஆகிய மூன்று நாட்களில் வழிபாட்டுத் தலங்களில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்ற நிலை தொடரும். பள்ளிகள் திறந்து ஒருவாரம் கடந்த பின், கரோனா குறைந்திருந்தால் வழிபாட்டுத் தலங்கள் திறப்பு பற்றி முடிவெடுக்கப்படும். கடற்கரை, திரையரங்குகள் திறப்பால் தொற்று எண்ணிக்கை குறித்த புள்ளிவிவரங்களுக்காகக் காத்திருக்கிறோம். கரோனா தொற்று தொடர்ந்து குறைந்தால், கூடுதல் தளர்வுகள் குறித்து முடிவெடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)