Skip to main content

வாயில் காயத்துடன் சுற்றும் பாகுபலி; மேட்டுப்பாளையம் வந்தடைந்த விஜய், வசீம்

Published on 28/06/2023 | Edited on 28/06/2023

 

Bahubali walking around with a wound in his mouth; Vijay and Wasim reached Mettupalayam

 

அண்மையில் பல்வேறு முயற்சிகளுக்கு பிறகு அரிக்கொம்பன் யானையை பிடித்திருக்கும் நிலையில் அடுத்தகட்டமாக மேட்டுப்பாளையத்தில் வாயில் காயத்துடன் சுற்றிவரும் பாகுபலி யானையை பிடிப்பதற்கு வனத்துறையினர் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

 

தொடர்ந்து பாகுபலி யானையை பிடிக்க முடியாத சூழல் நிலவி வருவதால் அதைப் பிடிப்பதற்காக விஜய், வசீம் ஆகிய இரண்டு கும்கி யானைகள் மேட்டுப்பாளையம் வரவழைக்கப்பட்டுள்ளது. காட்டு யானைகளாக பிடிக்கப்படும் யானைகள் உரிய பயிற்சிகளுக்கு பின்பு கும்கி யானைகளாக மாற்றப்படும் நிலையில் தற்பொழுது மேட்டுப்பாளையம் கொண்டுவரப்பட்டுள்ள விஜய், வசீம் ஆகிய இரண்டு கும்கி யானைகளும் தெப்பக்காடு முகாமில் பிறந்து சிறு வயதிலிருந்தே கும்கி பயிற்சி பெற்றது.

 

விஜய், வசீம் ஆகிய இந்த இரண்டு யானைகளுக்கும் அட்டப்பாடி, திருவண்ணாமலை உள்ளிட்ட பகுதிகளில் மக்களை அச்சுறுத்தும் வகையில் சுற்றித் திரிந்த யானைகளை பிடிப்பதில் முக்கியப் பங்காற்றின. இந்நிலையில் பாகுபலி யானை சுற்றித் திரியும் இடத்தை துல்லியமாக கண்டறிந்த பிறகு இரண்டு யானைகளையும் அங்கு அழைத்துச் சென்று யானையை பிடிப்பதற்கான முயற்சிகள் எடுக்கப்படும் என வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

குள்ளநரி கறி விருந்து; கம்பி எண்ணும் இளைஞர்! 

Published on 01/12/2023 | Edited on 01/12/2023

 

Youth arrested under Wildlife Protection Act in trichy

 

திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் வட்டம், வயலூர் அருகே இனாம்புலியூர் கிராமத்தில் குள்ளநரி தோல் விற்பனை செய்வதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

 

அதனைத் தொடர்ந்து திருச்சி மண்டல தலைமை வனப் பாதுகாவலர் சதீஷின் வழிகாட்டுதலின் படியும், திருச்சி மாவட்ட வன அலுவலர் சுமேஷ் சோமன் உத்தரவின் படியும், திருச்சி வனச் சரக அலுவலர் கோபிநாத் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

 

இத்தனிப்படையினர், கடந்த நவம்பர் 29 அன்று இனாம்புலியூர் கிராம தெற்கு மேட்டுத் தெருவைச் சேர்ந்த சி. லட்சுமணன் என்பவரின் மகன் ல. அய்யர் (26) என்பவரது வீட்டை சோதனை செய்தனர். அப்போது குள்ளநரியின் தோல் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தது  கண்டுபிடிக்கப்பட்டது. 

 

இது குறித்து அய்யரிடம் நடத்திய விசாரணையில், கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பாக இனாம்புலியூர் கிராம காட்டுப் பகுதியில் வேட்டை நாயை வைத்து குள்ளநரியை வேட்டையாடி மாமிசத்தை சாப்பிட்டு, தோலை விற்பனைக்காக வைத்திருந்தது தெரியவந்தது. 

 

அதனைத் தொடர்ந்து அய்யர் மீது வன உயிரின பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து போலீஸார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அய்யரை திருச்சி குற்றவியல் நீதிமன்ற நடுவர் எண் 5 முன்பு ஆஜர்படுத்தினர். நீதிமன்றம் அவரை 15 நாள் சிறையில் அடைக்க உத்தரவிட்டது. அதனைத் தொடர்ந்து அய்யர், திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

 

 

Next Story

யானை உயிரிழப்பு; அதிமுக கவுன்சிலரிடம் விசாரணை

Published on 26/11/2023 | Edited on 26/11/2023

 

hosur elephant incident forest department enquiry for admk counsilor

 

பெண் யானை உயிரிழந்தது தொடர்பாக அதிமுக கவுன்சிலரிடம் வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகராட்சியில் அதிமுகவைச் சேர்ந்த பால் நாராயணன் என்பவர் வார்டு கவுன்சிலராக இருந்து வருகிறார். இவருக்கு ஓசூர் அருகே உள்ள தாவரகரை என்ற கிராமப் பகுதியில் சொந்தமான தோட்டம் உள்ளது. இந்த சூழலில் அதிமுக கவுன்சிலர் பால் நாராயணன் தோட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள கோழிப் பண்ணையில் ஆழ்துளை கிணற்றுக்காக ஏற்படுத்தப்பட்ட மின்சார மோட்டாரில் பாதுகாப்பு இல்லாமல் வயர்கள் கீழே கிடந்துள்ளன.

 

இந்நிலையில் இங்கு நேற்றிரவு கூட்டமாக வந்த 10 யானைகளில் இருந்த 8 வயது மதிக்கத்தக்க பெண் யானை ஒன்று இந்த வயர்களை கடித்து உயிரிழந்துள்ளதாகத் தெரியவந்துள்ளது. இதனையடுத்து அதிமுக கவுன்சிலர் பால் நாராயணனிடம் பெண் யானை உயிரிழந்தது தொடர்பாக வனத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பெண் யானை உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.