Published on 12/01/2019 | Edited on 12/01/2019

திருச்சி கே.கே.நகர் காஜாமலை முஸ்லீம் 2 வது தெருவில் கல்லூரி பேராசிரியர் ஒரு வீட்டின் முன்பு கட்டைபையில் பிறந்து ஒருநாளான பெண் குழந்தை ஒன்றை ரோட்டின் ஓரத்தில் போட்டுச்சென்றுள்ளனர்,அவ்வழியாக காலை 05.30 மணிக்கு சென்ற காஜாமலை 2வது முஸ்லீம் தெருவில் வசித்து வரும் அப்துல் கபூர் என்பவர் மகன் ஷாஜஹான் 47 என்பவரின் தகவலின் பேரில் கே.கே.நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குழந்தையை மீட்டு கண்டோன்மெண்ட் பகுதியில் உள்ள சேவை குழந்தைகள் மையத்தில் ஒப்படைத்தனர்.. பின்னர் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.