Skip to main content

108 ஆம்புலன்ஸில் பிரசவம்; அழகான ஆண் குழந்தை பிறந்தது! 

 

baby boy delivery in an ambulance

 

சேலம் மாவட்டம், ஏற்காடு அருகே உள்ள சுரக்காப்பட்டியைச் சேர்ந்தவர் சிவராஜ். கூலித்தொழிலாளியான இவருக்கு கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு பூமணி (20) என்பவருடன் திருமணம் நடந்தது. 


நிறைமாத கர்ப்பிணியான பூமணிக்கு புதன்கிழமை (ஏப். 6) இரவு பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து 108 ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு தகவல் அளித்தனர். அடுத்த சில நிமிடங்களில் அவருடைய வீட்டுக்குச் சென்ற ஆம்புலன்ஸ் வாகனம், பூமணியை ஏற்றிக்கொண்டு நாகலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்க்க அழைத்துச் சென்றனர். 


ஆனால் பூமணிக்கு, செல்லும் வழியில் பிரசவ வலி அதிகமானது. செட்டிப்பட்டி அருகே சென்றபோது, ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வாகனத்தை ஓரமாக நிறுத்தச்சொல்லி விட்டு, அவருக்கு பிரசவம் பார்த்தனர். அப்போது, பூமணிக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. 


இதையடுத்து தொடர் சிகிச்சைக்காக தாயையும், குழந்தையையும் நாகலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். அங்கு தாயும் குழந்தையும் நலமாக உள்ளனர். உரிய நேரத்தில் பிரசவம் பார்த்து, நல்லமுறையில் குழந்தை பிறப்புக்கு உதவிய மருத்துவ ஊழியர் சிகாமணி, பாலமுருகன் ஆகியோரை 108 ஆம்புலன்ஸ் வாகன பொறுப்பு அலுவலர்கள் பாராட்டினர். 

 

 

இதை படிக்காம போயிடாதீங்க !