





டெல்லிக்கு புறப்பட்ட எங்களை வலுகட்டாயமாக கைது செய்கிறது தமிழக காவல்துறை என்று அய்யாக்கண்ணு குற்றம் சாட்டியுள்ளார்.
மத்திய அரசு இயற்றிய வேளாண் சட்டத்தை எதிர்த்து இந்தியா முழுவதும் உள்ள விவசாயிகள் தலைநகா் டெல்லியில் தங்களது போராட்டத்தை துவக்கி இன்று 8வது நாள் கடும் குளிரிலும் ஓயாமல் தங்களுடைய போராட்டத்தை நடத்தும் விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகத்தில் இருந்து புறப்படும் விவசாயிகளை அரசு வலுகட்டாயமாக கைது செய்து வருகிறது.
அதன் ஒரு பகுதியாக தென்னந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்கத்தின் சார்பில் டெல்லிக்கு புறப்பட தயாராக இருந்த விவசாயிகள் அணைவரையும் திருச்சி இரயில் நிலையத்தில் வைத்து காவல்துறையினா் கைது செய்துள்ளனா்.
திருச்சியில் இருந்து 60 போ் புறப்பட தயாராக இருந்தவா்களை கைது செய்த காவல்துறை அருகில் உள்ள தனியார் கல்யாண மண்டபத்தில் தற்போது அடைத்து வைத்துள்ளனா். டெல்லியில் இன்று விவசாயிகளுடன் நடத்தப்படும் பேச்சுவார்த்தையை வைத்து அடுத்தகட்ட போராட்டத்தை விவசாயிகள் நடத்த உள்ளனா்.