Skip to main content

75வது சுதந்திர தின விழா; வித்தியாசமான முறையில் விழிப்புணர்வு செய்த பள்ளி மாணவர்கள்

Published on 12/08/2022 | Edited on 12/08/2022


 

Awareness Independence Day programme school students

 

அரியலூர் மாவட்டம் கீழக்காவட்டாங்குறிச்சி கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த 450 மாணவ மாணவியர்கள் 75 வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பள்ளி சீருடையில் 75 என்ற எண்ணில் நின்றபடி யோகா செய்தும் கொடி வணக்கம் செலுத்தியும் சுதந்திர தின விழாவை வித்தியாசமான முறையில் செய்து காட்டியுள்ளனர். 

 

இந்த நிகழ்ச்சியில் 6 ஆம் வகுப்பு முதல்  12 ஆம் வகுப்பு வரை உள்ள 220 பள்ளி மாணவியர்கள் 7 என்ற எண்ணிலும், 5 என்ற எண்ணில் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள  230 மாணவர்களும் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் ரெ.செல்வக்குமார் தலைமை வகித்தார். 75 என்ற எண்ணை வடிவமைத்து உதவி செய்த ஓவிய ஆசிரியர் மு. மாரியப்பன், பள்ளி உதவி தலைமை ஆசிரியர் மூ.சுரேஷ்குமார்  உள்ளிட்டோர் பலர் இந்நிகழ்ச்சியை சிறப்பான வகையில் ஒருங்கிணைத்தனர். 

 

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக சமூக ஆர்வலர் பச்சை மனிதன் தங்க சண்முக சுந்தரம் மற்றும் பி.வினோத்ராஜ் கலந்து கொண்டு 75 வது சுதந்திர தின விழா விழிப்புணர்வு நிகழ்ச்சியை சிறப்பித்தனர். சுதந்திரம் பெற்றுத் தந்த தியாகிகளை நினைவு கூர்ந்தனர். மேலும் இந்த நிகழ்ச்சியில் மாணவ மாணவிகளின் பெற்றோர்களும் பெரும் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர். இந்த வித்தியாசமான விழிப்புணர்வு சுதந்திர தின நிகழ்ச்சி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

கொள்ளிடம் ஆற்றில் மாயமான மாணவர்கள்; சடலமாக மீட்பு!

Published on 25/02/2024 | Edited on 25/02/2024
3 students missing who bathed in Kollidam river

கொள்ளிடம் ஆற்றில் குளித்த 3 மாணவர்கள் மாயமாகியுள்ளனர்.

சென்னை அம்பத்தூரைச் சேர்ந்த 8 மாணவர்கள் உள்ளிட்ட 9 பேர் சென்னையில் இருந்து தஞ்சாவூர் நிகழ்ச்சி ஒன்றுக்கு சென்றுள்ளனர். பின்னர் நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு மீண்டும் சென்னை திரும்பியுள்ளனர். அப்போது வழியில் அரியலூர் மாவட்டம் திருமானூர் கொள்ளிடம் ஆற்றில் மாணவர்கள் குளித்துள்ளனர். அச்சமயம் மாணவர்கள் பச்சையப்பன் என்பவர் ஆற்றில் சிக்கிக்கொண்டார்.

இதனையடுத்து மற்ற மாணவர்கள் பச்சையப்பனை காப்பற்ற முயன்று ஆற்றில் இறங்கியுள்ளனர். இதனால் பச்சையப்பனுடன் 8 மாணவர்களும் ஆற்றில் சிக்கிக் கொண்டனர். இதனைக் கவனித்த பொது மக்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதில் 6 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். மீதமுள்ள 3 பேரை காப்பாற்ற முடியவில்லை. அவர்கள் தண்ணீர் அடித்துச் செல்லப்பட்டனர். அவர்களைத் தேடும் பணி நடைபெற்று வந்தது. இந்நிலையில் காணாமல் போன 3 மாணவர்கள் சடலமாக மீட்கப்பட்டனர்.  இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

3, 4, 5 ஆம் வகுப்புகளுக்கும் புதிய கல்விக் கொள்கை; மத்திய அமைச்சகம் திட்டவட்டம்

Published on 23/02/2024 | Edited on 23/02/2024
Union Ministry Scheme for New Education Policy for Classes 3, 4, 5

கடந்த 2020ஆம் ஆண்டில் இருந்து நாடு முழுவதும் உள்ள கல்வி நிலையங்களில் புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்த மத்திய அரசு முனைப்பு காட்டி வந்தது. இந்த திட்டத்தை கடந்த கல்வி ஆண்டிலேயே, நாடு முழுவதும் அமல்படுத்தியது. ஆனால், இந்த திட்டத்துக்கு தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. 

இந்த சூழலில் 2024 - 2025ஆம் கல்வி ஆண்டு வருகிற ஜூன் மாதத்தில் இருந்து தொடங்கவுள்ளதால், மாணவர் சேர்க்கைக்கான பணிகள் சில பள்ளிகளில் தொடங்கியுள்ளன. 

இந்த நிலையில், அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது. அதில், ‘3,4,5 ஆகிய வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு வரும் கல்வியாண்டில் புதிய கல்விக் கொள்கை அடிப்படையிலான பாடத்திட்டம் அமல்படுத்தப்படும்.

மேலும், பிரீ.கே.ஜி படிப்பில் சேர, மாணவர்களுக்கு மூன்று வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும். எல்.கே.ஜி படிப்பிற்கு நான்கு வயதும், யு.கே.ஜி எனில் ஐந்து வயதும் பூர்த்தி ஆகி இருக்க வேண்டும். முதல் வகுப்பு சேர்க்க வேண்டும் எனில் மாணவர்களுக்கு ஆறு வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.