Skip to main content

அவிநாசி விபத்தில் அதிர்ஷ்ட வசமாக தப்பித்த தம்பதி!

Published on 20/02/2020 | Edited on 20/02/2020

திருப்பூர் மாவட்டம் அவிநாசி ஆறு வழி தேசிய நெடுஞ்சாலையில் சேலத்திலிருந்து திருவனந்தபுரம் நோக்கி சென்று கொண்டிருந்த கேரள அரசு சொகுசு பேருந்தும், டைல்ஸ் லோடு ஏற்றி சென்ற லாரியும் மோதிக்கொண்ட விபத்தில் பேருந்தில் பயணித்த 6 பெண்கள் உள்பட 20 பேர் உயிரிழந்தனர். படுகாயமடைந்த 20 க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  

 

AVINASI

 

இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக தம்பதியினர் இருவர் உயிர் தப்பியுள்ளனர். ஆயுர்வேத மருத்துவராக இருக்கும் ஜோர்டன் இதுபற்றி கூறியதாவது, நான் எனது மனைவி அனு ஆகிய 2 பேரும் சவுதி பீரோ மெட்ரிக் தேர்வு எழுதுவதற்காக பெங்களூர் சென்று விட்டு திரும்ப பாலக்காடு செல்வதற்காக இந்த பஸ்ஸில் ஏறினோம். பஸ் டிரைவரின் எதிர்புறம் உள்ள பத்தொன்பது இருபது எண் கொண்ட சீட்டில் அமர்ந்து தூங்கிவிட்டோம். விபத்து நடந்தது எங்களுக்கு தெரியவில்லை. எங்களை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நாங்கள் கண் திறந்து பார்த்த பொழுது தான் இந்த எல்லா விவரங்களும் எங்களுக்கு தெரியவந்தது. எனக்கு மட்டும் லேசாக சிராய்ப்பு உள்ளது. என்னுடைய மனைவிக்கு ஒன்றும் ஆகவில்லை நாங்கள் மேல்சிகிச்சைக்காக சொந்த ஊருக்கு செல்ல உள்ளோம் என்றார்.

 

AVINASI

 

அதேபோல் இந்த விபத்தில் இரண்டு நாய்க் குட்டிகளும், ஒரு பூனைக்குட்டியும் சடலமாக மீட்கப்பட்டது. வளர்ப்புப் செல்லப்பிராணியாக கொண்டுவரப்பட்டதாக இருக்கலாம் என்றும் தெரிகிறது. விபத்துக்கு காரணமான லாரி ஓட்டுநர் மீது மூன்று பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை தொடர்ந்து வருகிறது.

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

ரயில் தடம் புரண்டு விபத்து; மீண்டும் பரபரப்பு

Published on 18/07/2024 | Edited on 18/07/2024
Train derailment accident; The excitement again

உத்தரபிரதேசத்தில் பயணிகள் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

உத்தரபிரதேசம் மாநிலம் கோண்டா பகுதியில் பயணிகள் ரயில் திடீரென தடம் புரண்டு விபத்து ஏற்பட்டுள்ளது. சண்டிகர் - திப்ரூகர் இடையே இயக்கப்படும் விரைவு ரயில் திடீரென தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இதில் ரயிலின் நான்கு ஏசி பெட்டிகள் உட்பட 12 பெட்டிகள் தடம் புரண்டு உள்ளதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் தொடர்பான எந்த விவரங்களும் வெளியாகாத நிலையில் மீட்புப் பணிகளை விரைந்து மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஏற்கனவே அண்மையில் ஒடிசாவில் ரயில் விபத்து ஏற்பட்டது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்  மீண்டும் ரயில் விபத்தில் 12 பெட்டிகள் தடம் புரண்டுள்ளது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

மோதி விட்டு நிற்காமல் பறந்த கார்; பஞ்சராகி பாதி வழியில் நின்றபோது பறிமுதல்

Published on 17/07/2024 | Edited on 17/07/2024
A car that caused an accident and did not stop

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகில் உள்ள சருக்கலக்கோட்டை மற்றும் குருந்திரகோட்டை கிராமங்களைச் சேர்ந்த 3 சிறுவர்கள் ஒரு பைக்கில் கீரமங்கலம் நோக்கி வந்து கொண்டிருந்தனர். அப்போது பனங்குளம் தெற்கு கிராமத்தில் அருகே திருவாரூர் மாவட்டம் முன்னாவல்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேசன் மகன் தனபாண்டி (வயது 24) அறந்தாங்கி நோக்கி ஓட்டிச் சென்ற கார் எதிரே வந்த சிறுவர்களின் பைக் மீது மோதிய விபத்தில் 3 சிறுவர்களும் படுகாயமடைந்தனர்.

ஆனால் விபத்து ஏற்படுத்திய கார் சம்பவ இடத்தில் நிறுத்தாமல் வேகமாகச் சென்று விட்டது. அந்த வழியாகச் சென்றவர்கள் ரத்த காயங்களுடன் கிடந்த 3 சிறுவர்களையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சிறுவர்களின் பைக் மீது மோதி நிற்காமல் தப்பிச் சென்ற கார் ஒரு கி.மீ தூரத்தில் குளமங்கலம் தெற்கு பகுதியில் பஞ்சராகி நின்றுவிட்டது. தகவலறிந்து சென்ற கீரமங்கலம் போலீசார் பஞ்சராகி நின்ற காருக்கு மாற்று டயர் மாற்றி காரை கைப்பற்றி கீரமங்கலம் காவல் நிலையம் கொண்டு வந்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.