
ஊபர் ஆட்டோவில் நள்ளிரவில் பயணித்த இளம்பெண்ணுக்கு ஆட்டோ ஓட்டுநர் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் அளிக்கப்பட்ட நிலையில், இது தொடர்பாக சென்னை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை தரமணியில் உள்ள கல்லூரி ஒன்றில் பயின்று வந்த பயிற்சி பத்திரிகையாளரான இளம்பெண் ஒருவர் ஈசிஆர் பகுதியில் இருந்த விடுதிக்கு நள்ளிரவில் ஊபர் ஆட்டோவில் தோழியுடன் சென்றுள்ளார். அப்பொழுது ஆட்டோ ஓட்டுநர் மாணவியிடம் தவறாக நடக்க முயன்றதாக கூறப்படுகிறது. உடனே கூச்சலிட்ட இளம்பெண் கத்தியும் அருகிலிருந்த யாரும் உதவ முன் வரவில்லை, உடனே அம்மாணவி அவருடைய டிவிட்டர் பக்கத்தில் ஆட்டோவின் எண் மற்றும் புகைப்படத்தை பதிவேற்றி இது தொடர்பான புகார் ஒன்றையும் வெளியிட்டார். அதனைத் தொடர்ந்து செம்மஞ்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். மாணவி பகிர்ந்துள்ள இந்த டிவிட்டர் பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மாணவி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.