திருச்சி சிங்காரத்தோப்பு பகுதியில் உள்ள பர்மா பஜார் பொருட்கள் விற்பனை செய்யும் சுமார் 30-க்கும் மேற்பட்ட கடைகள் சாலைகளை ஆக்கிரமிப்பு செய்து உள்ளதாக எழுந்த புகாரையடுத்து இன்று மாநகராட்சி அதிகாரிகள் ஆக்கிரமிப்பு செய்த பகுதிகளை பொக்லைன் இயந்திரங்கள் மூலம் அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. நிர்ணயிக்கப்பட்ட அளவை விட இப்பகுதியிலுள்ள கடை உரிமையாளர்கள் சாலையை ஆக்கிரமித்துள்ளதால் இப்பகுதியில் தொடர்ந்து போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது.எனவே போக்குவரத்து நெரிசலை சீர்செய்யும் வகையில் இந்த ஆக்கிரமிப்புகள் எடுக்கப்படுவதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
திருச்சியில் ஆக்கிரமிப்புகளை அகற்றிய அதிகாரிகள்!
Advertisment