Skip to main content

நூதன முறையில் தங்கம் கடத்தியவர்களை கைது செய்த அதிகாரிகள்!

Published on 15/10/2021 | Edited on 15/10/2021

 

Authorities arrest gold smugglers

 

துபாயிலிருந்து திருச்சி விமான நிலையத்திற்கு வந்துசேர்ந்த ஏர் இந்தியா விமானத்தில் பயணித்த பயணிகளை வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது அட்டைப்பெட்டியின் அட்டைக்குள் வைத்து ஒட்டப்பட்டு 77.500 கிராம் தங்கம் கடத்திவரப்பட்டது தெரியவந்தது. இதன் மதிப்பு சுமார் 3 லட்சத்து 73 ஆயிரம் ரூபாய் வரை இருக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

சிங்கப்பூரிலிருந்து திருச்சி விமான நிலையம் வந்துசேர்ந்த பயணிகளை வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்ததில் மர அறுவை இயந்திரத்துக்குள் உருளை வடிவில் தங்கம் கடத்திவருவது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அதிகாரிகள், மோட்டாரை தனித்தனியாகப் பிரித்து அவற்றை பறிமுதல் செய்தபோது அதில் 368.5 கிராம் தங்கம் இருப்பது தெரியவந்தது. இதன் மதிப்பு சுமார் 17 லட்சத்து எழுபத்து ஆறாயிரம் ரூபாய் இருக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

ads

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

போலி பாஸ்போர்ட்; விமான நிலையத்தில் வைத்து காப்பு போட்ட காவல்துறை

Published on 01/02/2024 | Edited on 01/02/2024
Returnee arrested on fake passport at Trichy airport

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இம்மிகிரேஷன் அதிகாரி சுஜிபன் தலைமையிலான அதிகாரிகள் பயணிகளை சோதனைக்கு உட்படுத்தினர். அப்போது மலேசியாவில் இருந்து திருச்சிக்கு வந்த பயணிகளை அவர்கள் சோதனைக்கு உட்படுத்தினர்.

அப்போது தஞ்சாவூர்  ஒரத்தநாடு பகுதியைச் சேர்ந்த ஆனந்தராஜ் (39) என்பவரின் பாஸ்போர்ட்டை அதிகாரிகள் சோதனை செய்தபோது, அதில் போலியான அரசு முத்திரை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து போலீசார் அவரைப் பிடித்து ஏர்போர்ட் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் ஆனந்தராஜை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Next Story

கேரளா தங்கக் கடத்தல் வழக்கு; ஸ்வப்னா சுரேஷ் உள்பட 44 பேருக்கு அபராதம்!

Published on 08/11/2023 | Edited on 08/11/2023

 

Kerala gold theft case; 44 people including Swapna Suresh fined!

 

கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 5 ஆம் தேதி துபாயிலிருந்து திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரகத்துக்கு சுமார் 15 கோடி மதிப்புள்ள தங்கக் கட்டிகள் பார்சல் மூலம் கடத்தி வரப்பட்டது. ஒரு நாட்டின் தூதரக பார்சலில் தங்கம் கடத்தப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. 

 

இது தொடர்பான வழக்கில் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த அப்போதைய ஐக்கிய அமீரக தூதரகத் துணைச் செயலாளர் ஸ்வப்னா சுரேஷ், முதலமைச்சரின் முதன்மைச் செயலாளர் சிவசங்கரன், தூதரக முன்னாள் மக்கள் தொடர்பு அதிகாரி சரித்குமார் உள்பட 44 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும், இவர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் முதல்வர் பினராயி விஜயனின் முதன்மைச் செயலாளராக இருந்த சிவசங்கர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருந்தது. 

 

இந்த வழக்கு தொடர்பாக, தேசியப் புலனாய்வு அமைப்பு, அமலாக்கத்துறை, சுங்கத்துறை உள்ளிட்ட 3 தரப்பும் விசாரணை நடத்தி வருகிறது. இதில் ஸ்வப்னா சுரேஷ், சிவசங்கர் ஆகியோர் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், தற்போது அவர்கள் ஜாமீனில் இருக்கின்றனர். மேலும், இது தொடர்பான வழக்கு தற்போது எர்ணாகுளம் பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. 

 

இந்த நிலையில், தங்கக் கடத்தல் குறித்து விசாரித்த மத்திய சுங்கத்துறை, இந்த கடத்தலில் நேரடியாக ஈடுபட்டதாக ஸ்வப்னா சுரேஷ், சரித்குமார், சந்தீப் நாயர், ரமீஸ் ஆகியோருக்கு தலா ரூ. 6 கோடி வீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும், முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி சிவசங்கருக்கு ரூ. 50 லட்சம் என இந்தக் கடத்தலில் ஈடுபட்ட 44 பேருக்கும் மொத்தம் 66.65 கோடி அபராதம் செலுத்த வேண்டும் என மத்திய சுங்கத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.