Skip to main content

கவனத்தை ஈர்க்கும் முதல்வரின் 'சலூன் கோச்' ரயில் பயணம்

Published on 08/12/2022 | Edited on 08/12/2022

Attention-grabbing Chief Minister's train Journey

நலத்திட்ட உதவிகளை துவங்கி வைப்பதற்காக தென்காசி சென்றிருக்கும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ரயிலில் பயணம் செய்யும் புகைப்படங்கள் வெளியாகி கவனத்தை ஈர்த்து வருகிறது. தென்காசி அடுத்த இலத்தூர் வேல்ஸ் வித்யாலயா பள்ளி மைதானத்தில் அரசின் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று காலை நடைபெறுகிறது. சுமார் பத்து மணிக்கு இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த விழாவில் பங்கேற்பதற்காக தமிழக முதல்வர் நேற்று இரவு சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து பொதிகை எக்ஸ்பிரஸ் மூலமாக தென்காசிக்கு புறப்பட்டார். அவருடன் துர்கா ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் கே.என்.நேரு, பெரியசாமி போன்றோரும் ரயிலில் பயணம் செய்தனர்.

அவர் பயணித்த சலூன் கோச் பெட்டியின் சிறப்பம்சங்கள்: இந்திய ரயில்வே இந்த கோச்சை உயர் பதவியில் இருப்பவர்களுக்காக உருவாக்கியுள்ளது. குடியரசுத் தலைவர், துணைக் குடியரசுத் தலைவர், ஆளுநர், முதலமைச்சர் போன்ற உயர் பதவிகளில் இருப்பவர்கள் விமானம் மூலம் செல்ல முடியாத இடங்களுக்கு செல்வதற்காக இந்தப் பெட்டியானது உருவாக்கப்பட்டுள்ளது.

இதில் கழிவறை வசதி, இரண்டு படுக்கை அறைகள், உணவு அருந்தும் இடம், சோபா, சமையலறை உள்ளிட்ட அனைத்து வசதிகளும் உள்ளது. அது மட்டும் இல்லாமல் இப்பெட்டியானது ரயிலின் கடைசி பெட்டியாக இணைக்கப்படும். பின்புறம் இருக்கும் கண்ணாடி ஜன்னல் மூலம் இயற்கை அழகை ரசித்தவாறு பயணிக்க ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. உயர் பதவிகளில் இருப்பவர்கள் மட்டுமல்ல, பொதுமக்களும் பயணம் செய்ய விரும்பினால் 2 லட்சம் ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். இந்திய ரயில்வேயில் இதுவரை 336 சலூன் கோச்கள் உள்ளன. இந்த கோச்சில் நேற்று இரவு தமிழக முதல்வர் பயணம் செய்த புகைப்படங்கள் கவனத்தை ஈர்த்து வருகிறது.

சார்ந்த செய்திகள்

Next Story

தேர்தல் விடுமுறை; நெரிசலால் உயிரைப் பணயம் வைக்கும் பயணிகள்!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
election holiday; Passengers risking their lives due to congestion

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தத் தேர்தலை முன்னிட்டு நாளை பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து சனி, ஞாயிறு விடுமுறை என்பதால் மொத்தம் மூன்று நாட்கள் விடுமுறை வருகிறது. இதன் காரணமாக சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு தேர்தல் விடுமுறைக்காக செல்வோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்நிலையில் சென்னை, தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்கு படையெடுக்கும் மக்கள், முன்பதிவு இல்லாத ரயில் பெட்டியில் அதிகப்படியாக பயணம் செய்து வருகின்றனர். சில ரயில்களில் ஆபத்தான வகையில் தொங்கியபடி பயணம் செய்யும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Next Story

கோவையில் ஜிபே மூலம் பாஜக பணப்பட்டுவாடா-திமுக புகார்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
DMK complains about BJP payment through GPay in Coimbatore

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கோவை தொகுதியில் பாஜகவினர் ஜிபே மூலம் பண பட்டுவாடா செய்வதாக புகார்கள் எழுந்துள்ளது. இதுகுறித்து திமுக புகார் எழுப்பியுள்ளது. பிரச்சாரம் முடிந்தவுடன் வெளியூர் நபர்கள் தொகுதியை விட்டு வெளியேற வேண்டும் என்ற நடைமுறையை பின்பற்றவில்லை என திமுக குற்றம் சாட்டியுள்ளது. கோவை அவிநாசி சாலையில் உள்ள அலுவலகத்தில் வெளி மாவட்டத்தைச் சேர்ந்த பலர் தங்கி ஜிபே மூலம் பணம் பட்டுவாடா செய்து பாஜகவுக்கு வாக்களிக்கும்படி கோரி வருகின்றனர் எனவும், சென்னையை சேர்ந்த ஜெயப்பிரகாஷ், கிருஷ்ணகுமார், கரூரை சேர்ந்த சிவகுமார் ஆகியோர் பணம் பட்டுவாடா செய்வதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் திமுக வலியுறுத்தியுள்ளது.