/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/n398.jpg)
கொடுத்த கடனை கேட்டவரை திமுக கவுன்சிலரின் கணவர் அரிவாளால் வெட்ட முயலும் வீடியோ காட்சிகள் வெளியான நிலையில் போலீசார் அவருக்கு வலை வீசி உள்ளனர்.
திருச்சி மாவட்டம் தளுதாளப்பட்டி ஊராட்சி ஒன்றிய திமுக கவுன்சிலர் நித்யா. இவரது கணவர் வெற்றிச்செல்வன். வெற்றிச்செல்வன் அதேபகுதியைச் சேர்ந்த குணசேகரன் என்பவரிடம் இரண்டு லட்சம் ரூபாய் கடனாக பெற்றுள்ளார். கொடுத்த கடனை குணசேகரன் அவரது உறவினர்களுடன் வந்து வெற்றிச்செல்வனிடம் கேட்டுள்ளார். அப்பொழுது போதையிலிருந்த வெற்றிச்செல்வன் அரிவாளை எடுத்து கடனை கேட்க வந்த குணசேகரன் மற்றும் அவரது உறவினர்களை துரத்தித் துரத்தி வெட்ட முயன்றுள்ளார். இதனால் அவர்கள் பதறியடித்துக் கொண்டு தப்பித்து ஓடினர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி இருந்த நிலையில், தலைமறைவாக உள்ள வெற்றிச்செல்வனை போலீசார் தேடி வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)