
சென்னையில் நேற்று இரவு கனரா வங்கி ஏடிஎம்-ஐ உடைத்து பணத்தைத்திருடமுயன்ற இரண்டு பேரை சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் போலீசார் தேடி வருகின்றனர்.
சென்னை அண்ணா சாலை நந்தனம் அருகே உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்திற்குச் சொந்தமான அலுவலகத்தின் தரைதளத்தில் கனராவங்கி ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்த இடத்தில் கனரா வங்கி ஏடிஎம் ஒன்றும் உள்ளது. நேற்று முன்தினம் இரவு 10:30 மணிக்கு மேல் ஏடிஎம் மையத்தில் இருந்து சத்தம் வந்துள்ளது. அந்தப் பகுதியில் காவலராக இருக்கக்கூடிய சிவக்குமார் என்பவர் குடியிருப்பின் முதல் தளத்தில் இருந்து கீழே இறங்கி வந்து பார்த்துள்ளார். அப்போது ஏடிஎம் மையத்தில் இருந்து சந்தேகப்படும் வகையில் இருவர் ஓடியுள்ளார்.
உள்ளே சென்று பார்த்த பொழுது ஏடிஎம் இயந்திரத்தின் மானிட்டர் கண்ணாடி உடைக்கப்பட்டிருந்தது. உடனடியாக வங்கி அதிகாரிகளுக்குத்தகவல் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து காவல்துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்ததேனாம்பேட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டனர். மேலும் அங்கிருந்தசிசிடிவி காட்சிகளைஆராய்ந்ததில் அதில் இரண்டு நபர்கள் மதுபோதையில் ஏடிஎம் இயந்திரத்தை உடைக்கும் காட்சிகள் இடம் பெற்றிருந்தது. இந்தக் காட்சிகளை அடிப்படையாக வைத்து குற்றவாளிகளைப் போலீசார் தேடி வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)