Skip to main content

100 ரூபாய் கேட்டால் 500 ரூபாய் கொடுத்த ஏ.டி.எம்; புதுக்கோட்டையில் பரபரப்பு!

Published on 23/05/2024 | Edited on 23/05/2024
ATM in Pudukkottai gave 500 rupees when asked for 100 rupees
கோப்புப்படம்

புதுக்கோட்டை கீரனூர் பகுதியில் தனியார் வங்கியின் ஏ.டி.எம் இயந்திரம் ஒன்று உள்ளது. இந்த நிலையில் அந்த ஏ.டி.எம் இயத்திரத்தில் நேற்று பணம் எடுக்க வந்தவர்களுக்கு 100 ரூபாய்க்கு பதில் 500 ரூபாய் வந்துள்ளது. இதனால் அவர்கள் அதிர்ச்சியடைந்தனர். இந்தச் செய்தி காட்டு தீ போன்று பரவ பலரும் அந்த ஏ.டி.எம் இயத்திரத்தில் பணம் எடுத்துள்ளனர். அப்போது அவர்களுக்கு 100 ரூபாய்க்கு பதில் 500 ரூபாயை இயந்திரம் தந்துள்ளது.

இதனையடுத்து தகவலின் பேரில் சம்பந்தப்பட்ட ஏ.டி.எம் வங்கியின் ஊழியர்கள் இயந்திரத்தை பரிசோதனை செய்தனர். அதில் ஏ.டி.எம் இயந்திரத்தில் பணம் வைக்க வந்த ஊழியர்கள் 100 ரூபாய் நோட்டுகள் வைக்க வேண்டிய இடத்தில் 500 ரூபாய் நோட்டுகளை வைத்ததால் தான் இந்தக் குளறுபடி நடத்தாக தெரிவித்தனர். பின்பு அது சரிசெய்யப்பட்டது.

இந்தக் குளறுபிடியால் ஏ.டி.எம்மில் இருந்து ரூ.2 லட்சததிற்கு மேல் பணம் எடுக்கப்பட்டுள்ளது. சிலர் தவறுதலாக வந்த பணத்தை சம்பந்தப்பட்ட வங்கியில் மீண்டும் ஒப்படைத்தாக கூறப்படுகிறது. அப்படி ரூ.60 ஆயிரம் வரை வந்துள்ளதாக கூறப்படுகிறது. மீதமுள்ள பணத்தைத் திரும்ப பெற அந்த நேரத்தில் ஏ.டி.எம்மில் பணம் எடுத்தவர்களின் வங்கி கணக்குகளை ஆராய்ந்து வருகின்றனர்.

சார்ந்த செய்திகள்

 

Next Story

தனியார் பேருந்து தலைகீழாகக் கவிழ்ந்து விபத்து; 20 பேர் காயம்

Published on 25/06/2024 | Edited on 25/06/2024
Private bus overturned accident; 20 people were injured

புதுக்கோட்டையில் தனியார் பேருந்து கவிழ்ந்து 20க்கும் மேற்பட்டோர் படுகாயத்துடன் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

புதுக்கோட்டையில் இருந்து புறப்பட்டு மணப்பாறை நோக்கிச் சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து அன்னவாசல் பகுதிக்கு முன்பாக உள்ள ஒன்றிய அலுவலக பகுதியில் சென்று கொண்டிருந்த பொழுது பேருந்தின் முன்பக்கம் டயர் வெடித்ததாகக் கூறப்படுகிறது. அப்போது கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையின் நடுவில் குறுக்காக தலைகுப்புற கவிழ்ந்தது. அந்தப் பேருந்தில் 50க்கும் மேற்பட்டோர் பயணித்த நிலையில் இருபதுக்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர்.

அலறியடித்தபடி உள்ளே சிக்கியுள்ள பயணிகளை மீட்கும் வீடியோ காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது. காயங்களுடன் மீட்கப்பட்ட பயணிகள் அனைவரும் 108 ஆம்புலன்ஸ் மூலமாக அன்னவாசல், இலுப்பூர், மணப்பாறை உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். சிலருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. விபத்து குறித்து தகவல் கொடுத்தும் சம்பவ இடத்திற்கு காவல்துறை வரவில்லை என அந்தப் பகுதி மக்கள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர். அதேபோல் பேருந்து அதிவேகமாக வந்ததால்தான் இந்த விபத்து நடந்தது என அங்குள்ள ஒரு சாரார் குற்றச்சாட்டுகளை வைத்துள்ளனர்.

Next Story

தேர் சரிந்து ஒருவர் பலி! - 5 பேர் காயம்

Published on 24/06/2024 | Edited on 24/06/2024
One lost life, 5 injured as chariot falls in Pudukkottai

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தாலுகா மாத்தூர் ராமசாமாபுரம் கிராமத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் திருவிழா கடந்த வாரம் காப்புக்ட்டுதலுடன் தொடங்கி நடந்து வருகிறது.

திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டத் திருவிழா இன்று மாலை 4 மணிக்கு நடக்க இருந்தது. இந்த நிலையில் தேர் அலங்கார சீரமைப்புப் பணிகள் தொடங்கி நடந்தது. இன்று காலை பலர் தேர் அலங்காரப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தேரின் உச்சியில் வைக்கப்பட வேண்டிய பெரிய குடம் ஏற்றப்பட்ட போது தேர் சக்கரத்திற்கு மேலே சரிந்து ஒரு பக்கமாக விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது.

அப்போது தேரின் மேல் இருந்து வேலை செய்து கொண்டிருந்தவர்கள் மற்றும் தேருக்கு கீழே நின்றவர்கள் என பலர் சாய்ந்த தேருக்குள் சிக்கிக் கொண்டனர். இதில் மாத்தூர் கிராமத்தைச் சேர்ந்த சபாபதி மகன் மகாலிங்கம் (60) தேருக்குள் சிக்கி உயிரிழந்தார். மேலும், தேர் கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த கீரமங்கலம் மேற்கு பகுதியைச் சேர்ந்த கணேசன் மகன் கோபு(45), கணபதி (50), சேந்தன்குடி தர்மலிங்கம் மகன் ஆறுமுகம் (46), மற்றும் மாத்தூர் கிராமத்தைச் சேர்ந்த ராமசாமி மகன் அழகர் (46), வீரையா மகன் விஜயகுமார் (36) ஆகியோர் படுகாயமடைந்து பேராவூரணி, புதுக்கோட்டை, திருச்சி ஆகிய ஊர்களில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.