Skip to main content

ஏ.டி.எம் பயன்படுத்த மீண்டும் கட்டணம்!

Published on 02/07/2020 | Edited on 02/07/2020

 

atm

 

வங்கிகள் தங்களது பணியாளர்களின் வேலை பளுவைக் குறைக்கவும், டெக்னாலஜி வளர்ச்சியைப் பயன்படுத்தி ஏ.டி.எம். என்கிற தானியங்கி இயந்திரம் மூலம் பணம் வழங்கும், செலுத்தும் வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தது. இந்தத் தானியங்கி இயந்திரங்களை ஒவ்வொரு வங்கியும் நகரம் மற்றும் முக்கியக் கிராமங்களில் வைத்துள்ளன. பொதுமக்கள் அதனைப் பயன்படுத்திக்கொண்டு வருகின்றனர்.

 

சில ஆண்டுகளுக்கு முன்பு ஏ.டி.எம்களில் இருந்து பணம் எடுத்தால் அதற்கு கட்டணம் செலுத்த வேண்டும் என ஆர்.பி.ஐ உத்தரவிட்டு, நடைமுறைப்படுத்தியது. அதன்படி ஒரு வங்கி வாடிக்கையாளர், தனது வங்கி தந்த ஏ.டி.எம் கார்டை பயன்படுத்தி அதே வங்கி அமைத்த ஏ.டி.எம் இயந்திரத்தில் பணம்மெடுத்தால் கட்டணமில்லை. வேறு ஒரு வங்கி வாடிக்கையாளர் வந்து பணம் எடுத்தால் கட்டணம் என அறிவித்தது. பின்னர் ஏ.டி.எம் கார்டு வைத்திருப்பவர்கள் மாதத்துக்கு 5 முறை மட்டும் எந்த வங்கி ஏ.டி.எம் இயந்திரத்திலும் பணம் எடுத்துக்கொள்ளலாம், ( எண்ணிக்கை மற்றும் கட்டணம் வங்கிக்கு வங்கி மாறுபடும் ) அதற்கு மேல் எடுத்தால் 25 ரூபாய்க் கட்டணம் என நிர்ணயித்தார்கள். அதோடு, வங்கிக் கணக்கில் குறைந்த பட்ச இருப்புத் தொகை குறைந்தால் கட்டணம் என அறிவித்து அதன்படி கட்டணத்தை வங்கிக் கணக்கிலேயே கழித்துக்கொள்கிறது வங்கி நிர்வாகம்.

 

இந்நிலையில் மார்ச் மாதம் கரோனாவை முன்னிட்டு ஊரடங்கு, 144 தடை உத்தரவு போடப்பட்ட நேரத்தில் 3 மாதத்துக்கு ஏப்ரல், மே, ஜீன் மாதத்திற்கு அனைத்துக் கட்டணங்களும் அதானது ஏ.டி.எமில் இருந்து பணம் எடுப்பதற்கான கட்டணத்தை ரத்து செய்யப்படுகிறது எனவும், மினிமம் பேலன்ஸ் குறைந்தாலும் அபராதம் இல்லை, கடன்களைத் தாமதமாகக் கட்டினாலும் அபராதம் இல்லை என வங்கி நிர்வாகங்கள் அறிவித்தன. அந்தக் கெடு ஜீன் 30ஆம் தேதியோடு முடிந்துவிட்டது.

 

ஜீலை 1ஆம் தேதி முதல் பழைய நடைமுறை மீண்டும் அமலுக்கு வந்துள்ளது. இனி மாதத்துக்கு 5 முறைக்கு மேல் ஏ.டி.எமில் பணம் எடுத்தால் கட்டணம், மினிமம் பேலன்ஸ் குறைந்தால் கட்டணம் என வங்கிகள் வசூலிக்கவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்