அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு உட்கட்சி தேர்தல் நடத்த வேண்டும் எனவும் அதுவரை சட்டமன்றத் தேர்தலுக்குத் தடை விதிக்க வேண்டும் எனவும் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
‘தமிழகத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளான, அ.தி.மு.க., தி.மு.க., சி.பி.எம். உள்ளிட்ட கட்சிகள், உட்கட்சி தேர்தலை நடத்த வேண்டும். அதுவரை தமிழகத்தின் சட்டமன்றத் தேர்தலுக்குத் தடை விதிக்க வேண்டும்’ என திண்டுக்கல்லைச் சேர்ந்த சூரியமூர்த்தி என்பவர் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
மேலும் அந்த மனுவில் ‘உட்கட்சித் தேர்தல்களை நடத்துவது ஜனநாயகத்தின் அடிப்படை கட்டமைப்பாக கருதப்பட வேண்டும்’ என குறிப்பிட்டுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வருமென எதிர்பார்க்கப்படுகிறது.