Skip to main content

தமிழக முதல்வருடன் அரவிந்த் கெஜ்ரிவால், பகவந்த் சிங் மான் சந்திப்பு

 

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆதரவு கோரினார்.

 

மாநில அரசின் அதிகாரங்களை குறைக்கும் வகையில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள சட்ட மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக ஆளாத மாநில முதல்வர்களை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சந்தித்து ஆதரவு கோரி வருகிறார்.

 

கடந்த 9 நாட்களாக தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக சிங்கப்பூர், ஜப்பான் நாடுகளுக்கு சென்று திரும்பிய நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை அரவிந்த் கெஜ்ரிவாலும் பஞ்சாப் முதலமைச்சரும் தன்னை சந்திக்க நேரம் கேட்டிருப்பதாகவும், அவர்களை சந்திக்க இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

 

அதன்படி சென்னை வந்தடைந்த டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் பஞ்சாப் முதல்வர் பகவந்த் சிங் மான் ஆகியோர் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து ஆதரவு கோரினர். இந்த சந்திப்பின் போது திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு, தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, அன்பில் மகேஷ் ஆகியோர் உடன் இருந்தனர்.

 

 

 

இதை படிக்காம போயிடாதீங்க !