Skip to main content

ஆறுமுகசாமி அறிக்கையின் பிரச்சனைகள் சட்டமன்றத்தில் தீர்க்கப்படும் - முதல்வர் ஸ்டாலின்

Published on 01/09/2022 | Edited on 01/09/2022

 

Arumugasamy Report's problems will be resolved in the Assembly; Chief Minister Stalin

 

கோவை கொடிசியா வளாகத்தில் முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி இல்லத்திருமண விழாவில் பங்கேற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழக நிதிப்பிரச்சனையை சீரமைத்த பின் மகளிருக்கான 1000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் எனக் கூறினார்.

 

திருமண விழாவில் பேசிய அவர் "திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி அரசியல் நோக்கத்தின் அடிப்படையில் அமைந்தது அல்ல. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக ஓ.பன்னீர்செல்வம் கூறினார். அப்போது முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமியால் ஆறுமுகசாமி தலைமையில் ஒரு ஆணையம் ஒப்புக்காக அமைக்கப்பட்டது. திமுக ஆட்சிக்கு வந்தால் ஜெயலலிதா மரணம் தொடர்பாக  அமைக்கப்பட்ட ஆணையத்தை முறையாக நடத்தி அறிக்கையைப் பெற்று அதன் மேல் முறையான நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தேர்தல் வாக்குறுதியாகக் கொடுக்கப்பட்டது. ஐந்து நாட்களுக்கு முன் நீதிபதி ஆறுமுகசாமியால் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. அதில் பல்வேறு பிரச்சனைகள் உள்ளன. அவை அனைத்தும் சட்டமன்றத்தில் விவாதிக்கப்படும். அதற்குரிய நடவடிக்கைகள் சட்டமன்றத்தின் மூலமாகவே நிறைவேற்றப்படும்.

 

அரசு மாநகராட்சி பள்ளிகளைத் தரம் உயர்த்த திட்டமிட்டுள்ளோம். செப் 5ல் அதைத் தொடங்கிவைக்க டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வருகை தர  இருக்கிறார். அரசுப் பள்ளிகளில் படித்த மாணவிகளுக்கு 1000 வழங்கும் திட்டமும் அன்று நிறைவேற்றப்பட இருக்கிறது. மாதம் ஆயிரம் கொடுப்பதாகச் சொன்ன உரிமை தொகை என்ன ஆகிற்று என சில தாய்மார்கள் கேட்டனர். கண்டிப்பாக வரும். நிதியைச் சரிசெய்து கொண்டிருக்கிறோம். ஓரளவு சரி செய்த பின் நிச்சயமாக அதையும் நிறைவேற்றுவோம் என்பது உறுதி" எனக் கூறினார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“கையில் புத்தகங்கள் தவழட்டும்” - முதல்வர் மு.க. ஸ்டாலின்!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Let the books creep in the hand says Chief Minister MK Stalin

மக்களிடையே வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிப்பதற்காக ஐக்கிய நாடுகளின் சபையான யுனெஸ்கோ சார்பில் உலக புத்தக தினம் ஒவ்வொரு ஆண்டு ஏப்ரல் 23 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.

இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உலக புத்தக தின வாழ்த்துச் செய்தியை தனது எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். அதில், “புதிய உலகத்திற்கான திறவுகோல், அறிவின் ஊற்று, கல்விக்கான அடித்தளம், சிந்தனைக்கான தூண்டுகோல், மாற்றத்திற்கான கருவி, மக்களை உணர வழிகாட்டி எனப் புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத் தழைக்கச் செய்யும் கொடை. அதனால் புத்தகங்களை வாசியுங்கள், நேசியுங்கள்; பிறர்க்குப் பரிசளித்து வாசிக்க ஊக்கப்படுத்துங்கள். புத்தகங்களைப் பரிமாறிக் கொள்வதை ஓர் இயக்கம் என நான் தொடங்கியது முதல் பெறப்பட்ட இரண்டரை லட்சம் புத்தகங்களுக்கு மேல், பல மாணவர்களுக்கும், நூலகங்களுக்கும் கொடையளித்துள்ளேன். கையில் புத்தகங்கள் தவழட்டும்! சிந்தனைகள் பெருகட்டும்! நல்வழி பிறக்கட்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 2017 ஆம் ஆண்டு திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயல் தலைவராக பொறுப்பேற்றதிலிருந்தும் 2021-ஆம் ஆண்டு தமிழ்நாடு முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகும் தன்னைச் சந்திக்க வருபவர்கள், பூங்கொத்துகள், பொன்னாடைகளைத் தவிர்த்து அன்பின் பரிமாற்றத்திற்கு அடையாளமாக புத்தகங்களை வழங்குமாறு வேண்டுகோள் விடுத்திருந்தார். அதன்படி தன்னைச் சந்திக்க வந்த பலரும் வழங்கிய ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்ட புத்தகங்களை தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு நூலகங்களுக்கும், புத்தகங்கள் கோரிக் கடிதம் அளித்தவர்களுக்கும், அமைப்புகளுக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Next Story

செஸ் வீரர் குகேஷுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Greetings from CM MK Stalin to chess player Gukesh

கேண்டிடேட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி கனடாவில் நடைபெற்றது. இதில் சாம்பியனுக்கான இறுதி போட்டியின் கடைசி சுற்றில் இந்தியாவின் தமிழ்நாட்டைச் சேர்ந்த கிராண்ட் மாஸ்டர் குகேஷ் (வயது 17) அமெரிக்காவின் நகமுராவை எதிர்கொண்டார். இந்த ஆட்டத்தில் இருவரும் 1/2 புள்ளிகள் பெற்றனர். இதன் மூலம் 14 சுற்றுகள் கொண்ட இந்த போட்டியின் முடிவில் 9 புள்ளிகள் பெற்று குகேஷ் சாம்பியன் பட்டம் வென்றார். நகமுரா 8.5 புள்ளிகள் மட்டுமே பெற்றிருந்தார்.

இந்த தொடரை வென்றதன் மூலம் உலக செஸ் சாம்பியன் ஷிப் செஸ் போட்டியில் சீனாவில் டிங் லிரெனை எதிர்கொள்ள குகேஷ் தகுதி பெற்றுள்ளார். மேலும் இந்தத் தொடரை வென்று இளம் வயதில் கேண்டிடேட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் தொடரை வெல்லும் நபர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். மூத்த செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்திற்குப் பின் செஸ் கேண்டிடேட்ஸ் தொடரை வெல்லும் இந்திய வீரர் குகேஷ் என்பது குறிப்பிடத்தக்கது. 

Greetings from CM MK Stalin to chess player Gukesh

இந்நிலையில் செஸ் வீரர் குகேஷுக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “அபாரமான சாதனை படைத்த குகேஷுக்கு வாழ்த்துகள். 17 வயதில் கேண்டிடேட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் செஸ் தொடரை வென்ற இளம் வீரர் என்ற வரலாற்றை படைத்துள்ளார். உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்திற்காக சீனாவின் டிங் லிரனுக்கு எதிரான போட்டியிலும் குகேஷ் வெல்ல வாழ்த்துகள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.