Skip to main content

கலைஞர் கலைத்துறை வித்தகர் விருது- மூன்று பேர் கொண்ட குழு அமைத்தது தமிழக அரசு! 

Published on 29/05/2022 | Edited on 29/05/2022

 

Artist Artist Magician Award- Government of Tamil Nadu formed a committee of three!

 

கலைஞர் கலைத்துறை வித்தகர் விருதை வழங்க இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் தலைமையில் மூன்று பேர் கொண்ட குழு அமைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 

 

இது தொடர்பாக, தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "தமிழ்த் திரையுலகில் சிறந்து விளங்கிய வாழ்நாள் சாதனையாளருக்கு முத்தமிழறிஞர் கலைஞரின் பெயரில் 'கலைஞர் கலைத்துறை வித்தகர் விருது' வழங்கப்படும் என்று ஆணை வெளியிடப்பட்டுள்ளது. 

 

அந்த வகையில், தமிழ் திரையுலகில் சிறந்து விளங்கிய வாழ்நாள் சாதனையாளருக்கு, கலைஞர் கலைத்துறை வித்தகர் விருதை 2022 ஆம் ஆண்டு ஜூன் 3- ஆம் தேதி அன்று முதல் ஒவ்வொரு ஆண்டும் வழங்க ஏதுவாக, விருதாளரைத் தேர்வுச் செய்ய திரைப்பட இயக்குநர் எஸ்.பி.முத்துராமனை தலைவராகவும், நடிகர் மற்றும் நடிகர் சங்கத் தலைவர் நாசர் மற்றும் நடிகர் மற்றும் இயக்குநர் கரு.பழனியப்பன் ஆகியோரை உறுப்பினர்களாகக் கொண்ட தேர்வுக் குழுவினை அமைத்து ஆணையிட்டுள்ளது. 

 

தேர்வுக் குழுவால் பரிந்துரைக்கப்படும் விருதாளருக்கு விருது தொகையான ரூபாய் 10 லட்சம் மற்றும் நினைவுப் பரிசு ஆகியவற்றினை முத்தமிழறிஞர் கலைஞரின் பிறந்த தினமான ஜூன் 3- ஆம் தேதி அன்று முதலமைச்சர் வழங்கி கௌரவிக்கவுள்ளார்." இவ்வாறு அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

சார்ந்த செய்திகள்