வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகையில் தமிழ்நாடு முதலிடம்

மத்திய அரசு சமீபத்தில் வெளியிட்டுள்ள தகவல்களில் கடந்த 2016-ம் ஆண்டில் தமிழகத்திற்கு அதிகமான வெளிநாட்டுசுற்றுலாப் பயணிகள் வருகை புரிந்துள்ளது தெரியவந்துள்ளது.
Advertisment

இந்தியாவில் முதலிடம் பிடித்துள்ளதைத் தொடர்ந்து தமிழகத்திற்கு அடுத்தப்படியாக கேரளா இரண்டாவது இடம் பிடித்துள்ளது.
Advertisment

மாநிலங்களவையில் மத்திய சுற்றுலாத் துறை மந்திரி மகேஷ் சர்மா வெளியிட்டு உள்ள எழுத்துப்பூர்வமான பதிலில்,வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகையில் தமிழகம் முதலிடம் பிடித்து உள்ளது என தெரிவித்துள்ளார்.2016-ம் ஆண்டில் மட்டும் தமிழகத்திற்கு சுமார் 47.22 லட்சம் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வந்து உள்ளனர். இந்தியாவிற்குசுற்றுலா வந்த மொத்த வெளிநாட்டு பயணிகள் எண்ணிக்கையில் 19.1 சதவிதம் வெளிநாட்டு பயணிகள் தமிழ் நாட்டில்சுற்றுலாவிற்கு வந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.