Skip to main content

“குழந்தை திருமணங்களில் தீட்சதர்கள் கைது செய்யப்படுவது பாராட்டுக்குரியது” - கி.வீரமணி

Published on 07/10/2022 | Edited on 07/10/2022

 

"The arrest of Dekchathers in child marriages is commendable" - K. Veeramani

 

திருச்சி மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பில் தந்தை பெரியாரின் 144 வது பிறந்த நாள் விழா மற்றும் புத்தகங்கள் அறிமுக விழா திருச்சியில் நடைபெற்றது. இதில் தி.க தலைவர் கி.வீரமணி கலந்து கொண்டார். 

 

இந்த நிகழ்ச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அவர், “முன்பிருந்த காலத்தை விட தற்போது பெரியாரியம் அதிகம் தேவைப்படுகிறது. மதவாதம், ஜாதிவாதம் தலை தூக்கி ஆடுகிறது. அனைவருக்கும் கல்வி என்பதை மறுக்கிறார்கள். புதிய கல்வி கொள்கை என்ற பெயரால் ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில் வேத பாட சாலையில் படித்தவர்கள் பத்தாவது, 12 வது படித்ததற்கு சமம் என பா.ஜ.க அரசு கூறுகிறது. நேரடியாக அவர்கள் பொறியியல் கல்லூரியில் சேரலாம் என கூறி இருக்கிறார்கள். இது பிற்போக்கு தனமான கண்டிக்கதக்க நடவடிக்கை. கல்வியின் தரம் தாழ்ந்து விட்டதாக அவர்கள் கூறுகிறார்கள். ஆனால்  இப்பொழுது தான் கல்வியின் தரம் தாழ்கிறது.

 

இது போன்ற செயல்பாடுகளை தடுக்கும் வகையில் தான் திராவிட மாடல் ஆட்சி செயல்பட்டு வருகிறது. அதில் குற்றம் குறைகளை கூறுகிறார்கள் அவர்களிடமிருந்து இந்த அரசை காக்க வேண்டியது திராவிட இயக்கங்களின் குறிப்பாக தி.க.வின் கடமையாக உள்ளது.

 

சட்ட விரோத குழந்தை திருமணம்; அடுத்தடுத்து கைதாகும் சிதம்பரம் தீட்சிதர்கள்

 

குழந்தை திருமணம் என்பது கிரிமினல் குற்றம். ஆனால் சிதம்பர தீட்சதர்கள் எந்த சட்டத்திற்கும் கட்டுப்படாமல் குழந்தை திருமணம் செய்து வந்தார்கள். இதை ஏற்கனவே இருந்த அரசு கண்டுக்கொள்ளவில்லை. தற்போது குழந்தை திருமணம் தொடர்பாக தீட்சதர்கள் உள்ளிட்டோர் கைது செய்யப்படுகிறார்கள். இதை பாராட்டுகிறோம். அதே நேரத்தில் இந்த நடவடிக்கை கண் துடைப்பு நடவடிக்கையாக இல்லாமல் தவறு செய்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த நாட்டில் உள்ள பெரும்பாலான சாமியார்கள் தேடப்பட்ட குற்றவாளிகளாக, தேடப்படும் குற்றவாளியாக தான் இருக்கிறார்கள்.

 

ராஜராஜ சோழன் குறித்து வெற்றிமாறனும், கமல்ஹாசனும் கூறிய கருத்து நூற்றுக்கு நூறு சரியான கருத்து. அவர்களின் கருத்தை வைத்து வெறித்தனத்தை பரப்பலாம் என சிலர் முயற்சித்தால் அந்த பருப்பு இங்கு வேகாது. வேதங்களில் கூட இந்து என்கிற வார்த்தை கிடையாது. வெள்ளைக்காரர்கள் வைத்த பெயர் தான் இந்து. அந்த மதத்திற்கு இந்து என்கிற பெயர் இல்லை என நீதிமன்ற தீர்ப்புகளே உள்ளன.

 

தேர்தல் ஆணையம் யாருடைய கைப்பாவையாக உள்ளது என்பது இந்திய மக்களுக்கே தெரியும். அது குறித்து நாம் கவலைப்பட தேவையில்லை. அந்த ஆணையங்கள் பல் இல்லாத ஆணையங்களாகவே உள்ளன” என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்களைக் கண்டித்து அரை நிர்வாண ஆர்ப்பாட்டம்!

Published on 22/06/2024 | Edited on 22/06/2024
Demonstration against Chidambaram Nataraja temple deities

சிதம்பரம் நடராஜர் கோவிலில் உள்ள தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவிலுக்கு கடந்த 300 ஆண்டுகளுக்கு மேலாக சைவ வைணவ பாகுபாட்டால் சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்கள் கோவிந்தராஜ பெருமாள் கோவிலுக்கு பிரம்மோற்சவம் நடத்துவதற்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

மேலும் தற்போது கோவிந்தராஜ பெருமாள் கோவில் இந்து சமய அறநிலை துறையின் கீழ் செயல்பட்டு வருகிறது இதற்கு இந்து அறநிலையத்துறை மற்றும் கோவில் அறங்காவலர்கள் பிரம்மோற்சவம் நடத்துவதற்கு அனைத்து ஏற்பாடுகளையும் செய்த போது நடராஜர் கோவில் தீட்சிதர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதுகுறித்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் சிதம்பரம் காந்தி சிலை அருகே தெய்வீகபக்தர்கள் பேரவை சார்பில் பிரம்மோற்சவம் நடத்த எதிர்ப்பு தெரிவிக்கும் தீட்சிதர்களை கண்டித்தும் பிரம்மோற்சவம் நடத்த ஒத்துழைப்பு அளிக்க வலியுறுத்தி அரை நிர்வாண கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தெய்வீக பக்தர்கள் பேரவை நிறுவனர் ஜெமினி ராதா தலைமை தாங்கினார்.

இதில் காங்கிரஸ் கட்சியின் நகர தலைவர் மக்கின், மாவட்ட நிர்வாகி ராஜா சம்பத்குமார், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட நிர்வாகி வி எம் சேகர், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலாளர் அரங்கத் தமிழ் ஒளி, தெய்வீக பக்தர்கள் பேரவை நிர்வாகிகள், அனைத்துக் கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் பொதுமக்கள் என நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு நடராஜர் கோவில் தீட்சிதர்களைக் கண்டித்தும், பிரம்மோற்சவம் நடத்த அனைத்து ஏற்பாடுகளுக்கும் எந்தவித தடையும் விதிக்காமல் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனக் கோஷங்களை எழுப்பினார்கள்.

Next Story

சிதம்பரம் அருகே சைவ சித்தாந்த 119ஆம் ஆண்டு மாநாடு!

Published on 22/06/2024 | Edited on 22/06/2024
Saiva Siddhanta 119th Annual Conference near Chidambaram

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே பின்னத்தூர் பர்வதவர்த்தினி உடனாய ராமநாதேசுவரர் மற்றும் அருணகிரிநாதர்- பாம்பன் குமரகுருதாச சுவாமிகள் கோவிலில் சென்னை மயிலாப்பூர் சைவ சித்தாந்தப் பெருமன்றத்தின் 119-ம் ஆண்டு விழா மாநாடு,  வெள்ளிக்கிழமை(21.6.2024) தொடங்கியது.

இதில் தமிழ்நாடு பவுண்டேசன் முதன்மைச் செயலாளர் இளங்கோ  கொடியேற்றி தொடங்கி வைத்தார். சத்தியமூர்த்தி கொடிக்கவி ஓதினார். மாலை 4 மணிக்கு கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் தமிழ் மண் சார்ந்த சைவ சித்தாந்த பெருமன்ற தலைவரும், சென்னைப் பல்கலைக்கழக சைவ சித்தாந்த துறை தலைவரும், பேராசிரியருமான நல்லூர் சா.சரவணன் அனைவரையும் வரவேற்று பேசுகையில் 'தமிழ் மண் சார்ந்த சைவ சித்தாந்த பாடத்தை முதன்மை பாடமாக கொண்டுவர அனைவரும் முயற்சிக்க வேண்டும்' என்றார்.

அண்ணாமலை பல்கலைக்கழக துணைவேந்தர் இராம.கதிரேசன் தலைமை தாங்கி சைவம் சித்தாந்தம் தொடர்பான 5 நூல்களை வெளியிட்டு பேசுகையில், “அறிவியல் சார்ந்த கருத்துக்கள் அதிகம் சைவ சித்தாந்தத்தில் பொதிந்து உள்ளது. குறிப்பாக அறிவியலில் முக்கியமாக கூறப்படும் 7 வகையான சக்திகள் சைவ சித்தாந்தத்தில் அடங்கியுள்ளது. சைவ சித்தாந்தம் மூலம் அறிவியல் தொழில் நுட்பமும் மேலும் முன்னேற வேண்டும். அத்துடன் சைவ சித்தாந்தம் தான் மக்களை மேம்படுத்தும் என்பதால் வெளியிடப்பட்ட நூல்கள் அனைத்தும் சமுதாயத்தை மேம்படுத்தும்” என்றார்.

தொடர்ந்து, பழனி ஆதீனம் குருமகா சந்நிதானம், சாது சண்முக அடிகளார் சின்னவேடம்பட்டி ராமானந்த குமரகுருபர அடிகளார்,  சென்னைப் பல்கலைக்கழக பதிவாளர் ஏழுமலை உள்ளிட்டோர் பேசினர். மன்ற செயலாளர் கமல.சேகரன் , மன்ற செயற்குழு உறுப்பினர் தக்ஷிணாமூர்த்தி உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் சிவனடியார்கள் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் சிவ பக்தர்கள் திரளாகக் கலந்து கொண்டனர் தொடர்ந்து 2-வது நாள் மாநாடு இன்று நடைபெறுகிறது.