Skip to main content

முழு ராணுவ மரியாதையுடன் ராணுவ வீரர் லஷ்மணனின் உடல் நல்லடக்கம்!

Published on 13/08/2022 | Edited on 13/08/2022

 

 Army soldier Lashman's physical restraint with full military honors!

 

தமிழக ராணுவ வீரர் லக்ஷ்மணனின் உடல்  முழு ராணுவ மரியாதையுடன் சொந்த ஊரில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

 

ஜம்மு காஷ்மீர் ரஜோரி அருகே உள்ள ராணுவ முகாமில் பயங்கரவாதிகள் நேற்று முன்தினம் எதிர்பாராத விதமாக நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் மதுரை மாவட்டம் டி.புதுப்பட்டியைச் சேர்ந்த ராணுவ வீரர் லக்ஷ்மணன் (24) உயிரிழந்தார். இன்று அவரது உடலானது விமானம் மூலமாக மதுரை விமான நிலையத்திற்குக் கொண்டுவரப்பட்டது. இயக்குநர் அலுவலகம் முன்பு ஏற்படுத்தப்பட்டுள்ள மேஜையில் வைக்கப்பட்டுள்ள ராணுவ வீரர் லக்ஷ்மணனின் உடலுக்கு ராணுவ அதிகாரிகள் அஞ்சலி செலுத்தினர்.

 

தமிழக அரசு சார்பில் தமிழக நிதித்துறை அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் அஞ்சலி செலுத்தினார். அதனைத்தொடர்ந்து மதுரை மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி மேயர், முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். இந்நிலையில் சொந்த ஊரான டி.புதுப்பட்டிக்கு கொண்டுசெல்லப்பட்டு அவரது உடல் முழு ராணுவ மரியாதையோடு 21 குண்டுகள் முழங்க நல்லடக்கம் செய்யப்பட்டது.

 Army soldier Lashman's physical restraint with full military honors!

 

லஷ்மணனின் சகோதரர் ராமன் அவரது லக்ஷ்மணன் குறித்து கூறுகையில், ''எல்லாரோடும் ஜாலியா பேசுவான். அவனுக்கு கிரிக்கெட் என்றால் ரொம்ப புடிக்கும், கிரிக்கெட்டும், இராணுவமும் அவனுக்கு உசுரு, தீய பழக்கம் எதுவும் இல்ல. ரெண்டுபேரும் ஒரே நேரத்தில்தான் செலக்ஷனுக்கு போனோம். தம்பி செலக்சன் ஆகிட்டான். எனக்கு அந்த வாய்ப்பு கிடைக்கல. ஆனா திடீர்னு மரண செய்தி வந்துருச்சு'' என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில் அவருடன் அவர் கிரிக்கெட் விளையாண்ட மட்டையும் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

 

சார்ந்த செய்திகள்