Skip to main content

சாதித்த மாணவி; சொன்னதைச் செய்து காட்டிய ஆசிரியை

Published on 19/06/2023 | Edited on 19/06/2023

 

ariyalur vanavanallur school students flight journey

 

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ளது வாணவநல்லூர் கிராமம். இங்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இதில் 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் அரசுப் பள்ளிகளில் எட்டாம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகளுக்குத் தேசிய திறனறிவு தேர்வு மத்திய அரசால் நடத்தப்படுகிறது. இதில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு மத்திய அரசின் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. இந்த நிலையில் வாணவநல்லூர் ஒன்றிய நடுநிலைப் பள்ளியிலும் தேசிய திறனறிவு தேர்வு நடைபெற்றது. இதில் 8 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர்.

 

இந்த தேர்வு எழுதுவதற்கு முன்பு இந்த தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்களை எனது சொந்த செலவில் விமானத்தில் அழைத்துச் சென்று மாணவர்களை உற்சாகப்படுத்துவேன் என்று அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியை அமுதா அறிவித்திருந்தார். இதையடுத்து தேர்வில் மிருணாளினி என்ற எட்டாம் வகுப்பு மாணவி திறனறிவு தேர்வில் தேர்ச்சி பெற்றார். இதைக் கண்டு தலைமை ஆசிரியை மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். ஆசிரியை தேர்வின் போது மாணவர்கள் தன்னம்பிக்கையுடன் தேர்வு பெறுவார்கள் என்பதற்காக விமானத்தில் அழைத்துச் செல்வேன் என்று ஒப்புக்குக் கூறியதாக மாணவர்கள் எண்ணிக்கொண்டிருந்தனர். ஆனால் சொன்னதைச் செய்து காட்டுவேன் என்ற அந்த தலைமை ஆசிரியை அமுதா வெற்றி பெற்ற மாணவி மிருநாளினியை பள்ளிச் சீருடையுடன் வாணவ நல்லூரில் இருந்து திருச்சி விமான நிலையத்திற்கு அழைத்துச் சென்றார்.

 

பின்னர் அங்கிருந்து விமானத்தில் சென்னை செல்ல டிக்கெட் வாங்கி மாணவியுடன் திருச்சியில் இருந்து சென்னைக்கு விமானத்தில் பறந்து சென்று மாணவியை மகிழ்ச்சி அடையச் செய்தார். மாணவி மிருநாளினிக்கு விமானத்தில் சென்றது அளவில்லாத சந்தோஷத்தை ஏற்படுத்தியது. விமான பயணத்திற்கு பிறகு சென்னையில் இருந்து ரயில் மூலம் மாணவியை ஊருக்கு அழைத்து வந்தார் தலைமை ஆசிரியை. ஆசிரியரின் இந்த செயல் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சென்னையில் 8 விமானங்கள் ரத்து

Published on 30/11/2023 | Edited on 30/11/2023

 

8 flights canceled in Chennai
மாதிரிப்படம்

 

வடகிழக்கு பருவமழை காரணமாகத் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.

 

அந்த வகையில், சென்னையில் நேற்று மாலை முதல் இன்று காலை வரை விடிய விடிய பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்தது. சென்னையில் கடந்த 12 மணி நேரத்தில் சராசரியாக 9.88 செ.மீ மழை பதிவாகியுள்ளது. மேலும் சென்னை ஆலந்தூர், கிண்டி, ஈக்காட்டுதாங்கல், வடபழனி, அம்பத்தூர் உள்ளிட்ட நகரின் பல்வேறு இடங்களில் மீண்டும் மழை பெய்து வருகிறது. இதனால் சென்னை விமான நிலையத்தில் விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

 

இந்நிலையில் மோசமான வானிலை காரணமாக சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்படும் விமானங்கள் நான்கும், சென்னைக்கு வருகை தர வேண்டிய விமானங்கள் நான்கும் என மொத்தம் 8 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதன்படி இன்று (30.11.2023) காலை 11.20 மணிக்கு சென்னையில் இருந்து சேலம் செல்ல இருந்த விமானம், காலை 10.15 மணிக்கு சென்னையில் இருந்து அபுதாபி செல்ல இருந்த விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளன. சென்னையில் இருந்து பிற்பகல் 2 மணிக்கு ஆந்திரா மாநிலம் கர்னூல் செல்லும் இண்டிகோ விமானம் உள்ளிட்ட 8 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 

 

 

Next Story

மீண்டும் அரங்கேறிய கொடூரம்; மாணவனைத் தாக்கி முகத்தில் சிறுநீர் கழித்த கும்பல்!

Published on 27/11/2023 | Edited on 27/11/2023

 

gang beaten a class 12 student and urinated on his face

 

12 ஆம் வகுப்பு மாணவர் ஒருவரை 4 பேர் கொண்ட மர்ம கும்பல் கொடூரமாகத் தாக்கி அவரின் முகத்தில் சிறுநீர் கழிக்கும் வீடியோ வெளியாகி பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

 

உத்தரப்பிரதேச மாநிலம் மீரட் மாவட்டத்தில் உள்ள மருத்துவ காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் 12 ஆம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவர் ஒருவரை 4 பேர் கொண்ட மர்ம கும்பல் கொடூரமாக அடித்து தாக்கியுள்ளது. மேலும் அந்த கும்பல் அந்த மாணவனின் முகத்தில் சிறுநீரையும் கழிக்கிறது. அந்த மாணவர் தன்னை விட்டுவிடுங்கள் என்று மன்றாடியும் அவர்கள் தொடர்ந்து தாக்குகின்றனர். இதனை நால்வரில் இரண்டு பேர் தங்களது செல்போனில் வீடியோவாக பதிவு செய்கின்றனர். 

 

இந்த நிலையில் அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. இது குறித்து மீரட் போலீசார் கூறுகையில், மாணவனை மர்ம கும்பல் தாக்கும் சம்பவம், கடந்த நவம்பர் 12 ஆம் தேதி  நடந்தது என்றும், அதில் சம்பந்தப்பட்ட அவி சர்மா, ஆஷிஷ் மாலிக், ராஜன் மற்றும் மோஹித் தாக்கூர் ஆகிய நான்கு பேர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளதாகவும், அதில் ஆஷிஷ் மாலிக் என்பவரைக் கைது செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

அண்மையில் மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் இது போன்ற சம்பவம் நடைபெற்ற நிலையில் தற்போது மீண்டும் ஒருவர் தாக்கப்பட்டு முகத்தில் சிறுநீர் கழிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.